Sun Transit 2023: தமிழ் புத்தாண்டான சித்திரை மாத தொடக்கத்தில், அதாவது ஏப்ரல் 14ம் தேதி சூரியன் மீன ராசியை விட்டு மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். அதோடு இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த நேரத்தில், இந்த நேரம் மொத்தம் 7 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும் பலனளிக்கக்கூடியதாகவும் இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு பணம், தொழில், ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தில் சூரியனை கிரகங்களின் ராஜா என்று அழைப்பர். வெற்றி, ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு ஆகியவற்றைத் தரும் கிரகம் சூரியன். ஜாதகத்தில் சூரியன் சுபமாக இருந்தால், சூரியனின் மஹாதசை அந்த நபரை தனது தொழிலில் மிக உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது.