சனி வக்ர பெயர்ச்சி: அடுத்த 4 மாதங்கள் இந்த ராசிகளுக்கு பொற்காலம்.... அதிர்ஷ்ட மழையில் நனைவார்கள்

Sani Vakra Peyarchi: சனி பகவான் ஜூன் 29 ஆம் தேதி வக்ரப் பெயர்ச்சி அடைய உள்ளார். அவர் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். சனி பகவானின் வக்ர பெயர்ச்சி முக்கியமான ஜோதிட நிகழ்வாக உள்ளது. 

Sani Vakra Peyarchi: சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவரது ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகின்றது. சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

சனி வக்ர பெயர்ச்சி ராசிகளின் மீது சில குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். பங்குச்சந்தையில் லாபம், வியாபாரத்தில் லாபம், சிக்கிய பணம் திரும்ப வருதல் ஆகியவை இவற்றில் சில. ஜோதிட சாஸ்திரப்படி ஒன்பது கிரகங்களில் கர்மகாரக கிரகமாக சனி பகவான் உள்ளார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். 

2 /10

தற்போது மூன்று ராசிகளுக்கு ஏழரை சனி நடந்துவருகிறது. மகரத்துக்கு கடைசி கட்டம், கும்பத்துக்கு இரண்டாம் கட்டம், மீனத்துக்கு முதல் கட்ட ஏழரை சனி நடக்கிறது. சனி 2025ல் மீன ராசியில் பெயர்ச்சி ஆவார். இதற்கு முன் ஜூன் 29-ம் தேதி சனி கும்பத்தில் வகர் பெயர்ச்சி அடைகிறார்.  

3 /10

சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு அடுத்த 4 முதல் 4 1/2 மாதங்கள் மிகவும் பலன் தரும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 5 ராசிக்காரர்கள் சனி பகவானால் ஆசீர்வதிக்கப்படலாம். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /10

மேஷம்: சனி வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். குடும்பம் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவுகள் முன்பை விட சிறப்பாக இருக்கலாம். முதலீடு மூலம் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது தவிர பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றிலும் நல்ல லாபம் பெறலாம். மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

5 /10

ரிஷபம்: சனி வகர் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கலாம். இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் வியாபாரத்தில் பெரிய வெற்றியைப் பெறலாம். தொழிலில் சில திட்டங்கள் வெற்றியையும் புகழையும் தரும். தந்தையுடனான உறவு வலுப்பெறும்.

6 /10

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி வக்ர பெயர்ச்சியால் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தொழில் மற்றும் நிதி வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்தமாக தொழில் செய்து நல்ல வருமானம் பெறுவார்கள். தடைப்பட்ட வேலைகள் அல்லது திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உண்டு.

7 /10

தனுசு: சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் சக ஊழியர்களின் அனுகூலமான ஆதரவு கிடைக்கும்.  உத்தியோகத்தில் உங்களின் பிடி வலுவடையும். சில இடங்களில் விரைவான வெற்றி வாய்ப்பு உள்ளது. புகழ் உயரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறலாம். உங்கள் கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம். நிதி ரீதியாக, சனி பகவானின் ஆசியால் நல்ல லாபம் கிடைக்கும்.

8 /10

மகரம்: சனி வக்ர பெயர்ச்சியின் தாக்கத்தால் மகர ராசிக்காரர்களுக்கு பேச்சின் செல்வாக்கு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான நேரமாக இது இருக்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து, வாகனம் வாங்கும் ஆசை நிறைவேறும்.

9 /10

சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்பவர்களை சனி பகவான் காத்து அருள்கிறார்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.