திங்கட்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... சில பலன்களும் பரிகாரங்களும்

Lucky Zodiacs of 11th March 2024: திங்கட்கிழமை மார்ச் மாதம் 11ஆம் தேதி, சந்திரன் மீன ராசியில் சஞ்சரிப்பார். மாசி மாத சுக்கில பக்ஷ, பிரதம திதியான அந்த நன்னாளில், எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகம் காத்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மாத பலன், வார பலன் போலவே, தின பலனும் கிரக நிலைகளுக்கு ஏற்ப கணிக்கப்படுகிறது. இந்நிலையில், மார்ச் மாதம் 11-ம் தேதியின் அதிர்ஷ்ட ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

1 /7

ரிஷப ராசியினருக்கு நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். உங்கள் நேர்மை பாராட்டப்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஆதரவை பெறுவார்கள்.

2 /7

கடக ராசியினருக்கு, மகிழ்ச்சியான தருணங்களை கழிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு குறித்த செய்தி வரலாம். புதிய வருமான ஆதாரங்கள் குறித்த யோசனைகள் மேம்படும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெறும் வாய்ப்பு உண்டு.. முதலீடுகள் மூலம் வருமானம் அதிகரிக்கும்.

3 /7

துலாம் ராசியினருக்கு சுறுசுறுப்பான புத்துணர்ச்சியூட்டும் நாளாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்துடன் ஆன்மீக யாத்திரை செல்ல திட்டமிடலாம். பணவரவு மகிழ்ச்சியை கொடுக்கும். புதியவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வம் மேம்படும்.

4 /7

தனுசு ராசியினருக்கு, அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சியினால் மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் கற்றல் திறன் நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி நிலவும்.  

5 /7

மீன ராசியினருக்கு மங்களகரமான நாளாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். ஒப்பந்தங்கள் மூலம் ஆதாயம் பெறலாம். முதலீட்டின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாகனம் அல்லது நிலம் வாங்க திட்டமிட்டு இருந்தால், அதற்கான நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

6 /7

வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் விலகி, நினைத்த காரியம் அனைத்தும் கைகூட, சிவபெருமான் கோவிலுக்கு சென்று வழிபடுவது பலனளிக்கும். சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்வதும், திங்கட்கிழமை விரதம் இருப்பதும், வாழ்வில் நிம்மதியையும் செல்வத்தையும் கொண்டு வந்து சேர்க்கும். காலையில் குளித்து சிவ ஸ்தோத்திரங்கள் சொல்லி வணங்குவதும் பலனளிக்கும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.