மஹாசிவராத்திரி 2023: சிவனின் அருளால் இந்த ராசிகள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும், இன்பம் பெருகும்

Mahashivratri 2023: மகாசிவராத்திரி இந்த ஆண்டு 18 பிப்ரவரி 2023 அன்று கொண்டாடப்படவுள்ளது. சிவராத்திரி அன்று சிவபெருமானின் ஸ்தோத்திரங்களை சொல்லி, சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டால், அவர் நம்மை அனைத்து தீமைகளிலிருந்தும் காப்பாற்றி அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாக்கிறார். இந்நாளில் சிவனை துதிப்பதால் அகால மரண பயம் தீரும்.

1 /6

இந்த ஆண்டு மஹாசிவராத்திரி அன்று சூரியன், சனி, சந்திரன் கும்ப ராசியில் அமர்ந்திருக்கும் திரிகிரஹி யோகம் உருவாகிறது. கிரகங்களின் இந்த நிலை காரணமாக, பல ராசிக்காரர்களுக்கு பணம், வேலை, வியாபாரம் போன்றவற்றில் பம்பர் பலன்கள் கிடைக்கும். மஹாசிவராத்திரி முதல் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என இந்த பதிவில் காணலாம். 

2 /6

மகாசிவராத்திரி பண்டிகை கும்ப ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை அளிக்கும். புதிய வேலையைத் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும். நீங்கள் நினைத்த வேலைகள் முடிவடையும். சிவபெருமானுடன் சனிபகவானின் அருளும் சேர்ந்து கிடைப்பதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும்.

3 /6

மேஷ ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி நாள் மங்களகரமானதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிவபெருமானின் அருளால் வருமானம் பெருக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வேலைகள் முடிவடையும். குடும்பத்தில் சொத்து குறித்து இருந்துவந்த சிக்கல்கள் தீரும்.

4 /6

கடகத்தின் கடவுளாக சிவபெருமான் கருதப்படுகிறார். மகாசிவராத்திரி அன்று, கடக ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் கருணை காட்டுவார். பண வருகையால் பெரும் நன்மை உண்டாகும். பல்வேறு இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

5 /6

சிவபெருமானின் விருப்பமான ராசிகளில் ஒன்று ரிஷபம். இந்த ஆண்டு சிவராத்திரி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் விசேஷமாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் முன்னேற்றம் தடைபட்டவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். சம்பளத்தில் அபரிதமான அதிகரிப்பு ஏற்படலாம். புதிய சொத்து, வாகனம் வாங்க இது உகந்த நேரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.