சனி உதயம்: இந்த ராசிகளுக்கு உச்சத்தில் அதிர்ஷ்டம், அமோகமான வாழ்க்கை

Shani Uday Before Holi: ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் சென்றாலும், அந்த கிரகம் அஸ்தமனம் ஆகிறது. அஸ்தமன நிலையில், ஒரு கிரகத்தின் பலம் குறைந்து அசுப பலன்களைத் தரத் தொடங்குகிறது. இதன் காரணமாக அஸ்தமன நிலையில் இருக்கும் கிரகத்தின் அமைப்பு நல்லதாக கருதப்படுவதில்லை. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி மாதம் பெயர்ச்சியான சனி தற்போது அஸ்தமன நிலையில் உள்ளது. மார்ச் 6, 2023 அன்று சனி உதயமாக உள்ளது. 

மார்ச் 8 ஆம் தேதி, புதன்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். இவ்வாறு ஹோலிக்கு முன் சனி எழுந்தருளுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. சனியின் உதயம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு சனி உதயம் அதிகப்படியான சுப பலன்களை அளிக்கும். 

1 /6

சனி 31 ஜனவரி 2023 அன்று அஸ்தமனமானது. இனி, சனி பகவான் மார்ச் 5, 2023 அன்று, உதயமாகி, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறப்பார்.  

2 /6

ரிஷபம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை சனியின் உதயம் பிரகாசமாக்கும். இவர்களின் தடைப்பட்ட வேலைகள் நடக்க ஆரம்பிக்கும். புதிய வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். பெரிய வெற்றிகளை எளிதாக அடைவீர்கள். இந்த காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

3 /6

ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் நன்றாக இருக்கும். இவர்கள் பெரும் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சனி பகவானை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

4 /6

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் பெரும் பலன்களைத் தரும். இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். கடனில் இருந்து விடுதலை கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பொன்னான வாய்ப்புகள் அமையும்.

5 /6

சனியின் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரவுள்ளது. இவர்களின் வருமானம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும், கூடுதல் வருமானம் வரும் என்பதால் செலவுகளால் பாதிப்பு ஏற்படாது. இந்த காலத்தில் ஆரோக்கியம் மேம்படும். முதலீடும் நன்மை தரும். இப்போது செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபங்களை அள்ளித் தரும். 

6 /6

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.