வெளியானது மாளவிகா மோகனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

காதல் உணர்வை கொண்டாடும் படைப்பாக உருவாகி இருக்கும் 'கிறிஸ்டி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

 

1 /5

அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் படம் 'கிறிஸ்டி'.  இதில் நடிகர் மேத்யூ தாமஸ் மற்றும் நடிகை மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கிறார்கள்.  

2 /5

மேத்யூ தாமஸ் மற்றும் மாளவிகா மோகனன் இணைந்து நடித்திருக்கும் 'கிறிஸ்டி' திரைப்படம் மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.  

3 /5

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள பூவார் மற்றும் மாலத்தீவுகளில் நடைபெற்றது.  

4 /5

காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு 'கிறிஸ்டி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  

5 /5

இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.