மாருதி விட்டாராவை டப்பா காருன்னு சொல்ல முடியாது..! பக்கா Safety

மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் அடாஸ் தொழில்நுட்பத்தை பொருத்தி வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

1 /11

மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரில் அடாஸ் தொழில்நுட்பத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது. உலக அளவில் உள்ள ஆட்டோமொபைல் துறை அடுத்தடுத்த பரிமாணங்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அதற்கு தகுந்தார் போல் வாகன தயாரிப்பு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களை அப்டேட் செய்து கொண்டே வருகின்றனர்.   

2 /11

இதன்படி மாருதி நிறுவனம் தனது ஃப்ளாக்ஷிப் சீட் எஸ்யூவி காரான கிராண்ட் விட்டாரா காரை அப்டேட் செய்து அதில் அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் அதாவது அடாஸ் சிஸ்டத்தை பொருத்த முடிவு செய்துள்ளது. தகவலின் படி மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரின் அடாஸ் தொழில்நுட்பத்தை பொருத்தி வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

3 /11

இந்த புதிய அப்டேட் காரணமாக இந்த காரின் விலை ரூபாய் 50,000 முதல் 75,000 வரை அதிகமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடாஸ் தொழில்நுட்பம் இந்த காரின் டாப் வேரியண்டான ஸ்ட்ராங் ஹைபிரிட் வேரியண்டில் மட்டுமே பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அடாஸ் தொழில்நுட்பம் பொருத்தப்படுவதால் இதன் விலை சற்று அதிகமாகும் என்றாலும் பாதுகாப்பை நாம் கருத்தில் கொள்ளும்போது இது பெரிய அளவில் விலை ஏற்றமாக இருக்காது.  

4 /11

அடாஸ் தொழில்நுட்பம் என்றால் என்ன? கார் பயணிக்கும் போது கார் விபத்தில் சிக்காமல் கார் வேறு எதுவும் வாகனங்கள் வந்து மோதாமலும் எலெக்ட்ரானிக் ரீதியாக உதவி செய்யும் கருவி தான் இந்த அடாஸ். இதன் மூலம் காரில் இருக்கும் பயணிகள் பாதுகாப்பாக இருக்க முடியும்.  

5 /11

மாருதி நிறுவனம் தனது கிராண்ட் விட்டாரா காரில் 2வது லெவல் அடாஸ் சிஸ்டத்தை பொருத்த திட்டமிட்டுள்ளது. இந்த அடாஸ் சிஸ்டம் ஸ்டேரிங், ஆக்ஸிலரேஷன், பிரேக்கிங் ஆகியவற்றை விபத்து ஏற்படும் என அறிந்தால் அதன் கண்ட்ரோலில் எடுத்து விபத்தை தவிர்க்க உதவி செய்யும்.  

6 /11

இந்த சிஸ்டம் பொருத்தப்பட்ட காரில் நீங்கள் பயணிக்கும் போது சாலையின் குறுக்கே ஏதாவது தடுப்புகள் இருந்தாலும் அதையும் இது உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படும். இதற்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் சென்சார்கள் பெரும் உதவியை செய்கின்றன. இந்த தொழில்நுட்பம் தற்போது மிகப்பெரிய அளவில் ஆட்டோமொபைல் துறையில் வளர்ந்து வருகிறது.  

7 /11

ஏற்கனவே ஹூண்டாய், டாடா, மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தங்கள் கார்களில் 2வது லெவல் அடாஸ் தொழில்நுட்பத்தை உட்பகுதியுள்ளனர். அந்த பட்டியலில் தற்போது மாருதி சுஸூகி நிறுவனமும் சேரப்போகிறது. இதன் மூலம் மாருதி நிறுவனமும் தொழில்நுட்பத்தில் தன்னை வளர்த்துக் கொண்ட ஒரு நிறுவனமாக மாறப்போகிறது.  

8 /11

மாருதி நிறுவனம் விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கில் இந்தியாவில் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட நிறுவனமாக இருக்கிறது. இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் பெரும்பான்மையான பங்கை மாருதி நிறுவனம் தான் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தங்கள் கார்களில் பாதுகாப்பிற்கான ஒரு தொழில்நுட்பத்தை உட்பகுத்துவது இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு பாதுகாப்பான காரை பெறும் வாய்ப்பை கிடைக்கும். இது அவர்களுக்கு தங்கள் தரத்தை வளர்த்துக் கொள்ளும் ஒரு அடுத்த படி நிலையாகும்.  

9 /11

மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஒப்பந்தத்தின்படி கிராண்ட் விட்டாரா காரை தற்போது டொயோட்டா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. அதே நேரம் கியா செல்டோஸ் ஹோண்டா எலிவேட் மற்றும் விரைவில் வரவுள்ள ஹுண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் ஆகிய கார்களும் இதன் போட்டிக்கு உள்ளன.  

10 /11

டொயோட்டா நிறுவனம் இந்த அடாஸ் தொழில்நுட்பத்தை தனது அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரிலும் பொருத்துகிறது. இந்த கார் மாருதி நிறுவனத்தின் கிராண்டு விட்டாரா காரின் டொயோட்டா வெர்ஷன் காராக விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாருதி நிறுவனம் இந்த ஆண்டு தனது கிராண்ட் விட்டாரா காரில் அடாஸ் தொழில்நுட்பத்தை அப்டேட் செய்ய திட்டமிட்டு இருந்தது. ஆனால் செமி கண்டெக்டர் தட்டுப்பாடு காரணமாக இதை மாருதி நிறுவனத்தால் செய்ய முடியவில்லை.  

11 /11

உலக அளவில் உள்ள சப்ளையர்கள் டொயோட்டா நிறுவனத்திற்கு அந்நிறுவனம் கேட்கும் அளவிலான செமி கண்டக்டர்களை தயார் செய்து வழங்க முடியாததால் இந்த அப்டேட்டை மாருதி நிறுவனம் தள்ளி போட்டுள்ளது. முக்கியமாக சென்சார், ரேடார், கேமராக்கள் ஆகியவற்றை தயாரிப்பதில் பெரும் சிக்கலை மீண்டும் ஆட்டோமொபைல் உலகம் சந்தித்து வருகிறது.