தஞ்சாவூர் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த அவெஞ்சர்ஸ் பட நடிகர்!

Michael Douglas in Thanjavur Temple: மார்வல் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஒருவர் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

1 /7

இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே அதிக வரவேற்பு உண்டு. குறிப்பாக மார்வல், டிசி படங்களுக்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். 

2 /7

அவெஞ்சர்ஸ் படத்தில் கேப்டன் அமெரிக்கா, ப்ளாக் விடோ, ஐயர்ன் மேன், ஸ்பைடர் மேன் என பலர் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூடும் படங்கள் அவெஞ்சர்ச்: இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ்: தி எண்ட் கேம் என்ற பெயர்களில் வெளிவந்துள்ளன. 

3 /7

இந்த படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த ஒருவர் தஞ்சாவூர் பெரிய கோயிலை தனது குடும்பத்தினருடன் விசிட் செய்துள்ளார். 

4 /7

முக்கியமான அவெஞ்சர் ஹீரோக்களுள் ஒருவர், ஆண்ட் மேன். இவரை உருவாக்கியவராக படத்தில் வரும் கதாப்பாத்திரத்தின் பெயர் ஹேங்க் பிம். 

5 /7

இந்த கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தவர், மைக்கில் டக்லஸ். இவர்தான் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்துள்ளார். 

6 /7

இவர், சமீபத்தில் கோல்டன் க்ளோப் விருதுகளை வென்றார். இவர் தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

7 /7

தனது பயணத்தில் ஒரு பகுதியாக, மைக்கில் டக்லஸ் தனது மனைவி கேத்ரீன் மற்றும் மகன் டிலன் உடன் தஞ்சாவூர் கோயிலுக்கு வந்திருந்தார். இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.