ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளரும் முகமது ஷமி தான்.
மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசினார்.
முதல் ஓவரிலேயே மிட்செல் மார்ஷை அவுட்டாக்கிய அவர், ஸ்டொயினஸ் உள்ளிட்ட 5 ஆஸ்திரேலிய வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பினார்.
10 ஓவர்களில் 51 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
கடந்த 16 ஆண்டுகளாக இந்திய மண்ணியில் எந்தவொரு இந்திய வேகப்பந்துவீச்சாளரும் 5 விக்கெட் எடுக்கவில்லை. அந்த குறைக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தார் முகமது ஷமி.
கடைசியாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் கோவாவில் 2007-ல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதேபோல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியாவில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்துவீச்சாளரும் முகமது ஷமி தான்.
அதேபோல், ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களில் 3வது வீரராக இணைந்துள்ளார். ஏற்கனவே கபில்தேவ் 1983-ல் நாட்டிங்ஹாம் மேட்சில் 43 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் அஜித் அகர்கர் 2004 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற போடியில் 42 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் பிளேயிங் லெவனில் முகமது ஷமிக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.