ராகு கேது பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்வில் இக்கட்டான காலம், பிரச்சனைகள் ஆட்டிப்படைக்கும்

Rahu Ketu Transit 2023: நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகுவும் கேதுவும் எப்போதும் வக்ர நிலையில் செல்லும் கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களும் பாவ கிரகங்களாக கருதப்படுகின்றன. எனினும், இவை பல ராசிகளுக்கு சில குறிப்பிட்ட நேரங்களில் நன்மைகளையும் செய்கின்றன. எனினும், இவை ஒருவரின் ஜாதகத்தில் தீங்கு விளைவிக்கும் நிலையில் இருந்தால், அந்த நபர் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். 

பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தும். ராகு கேது ஆகிய கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

1 /5

இரண்டு கிரகங்களும் அக்டோபர் 30, 2023 அன்று மீன ராசியில் நுழையும். இதன் காரணமாக, சில ராசிகள் கடினமான கலாத்தையும், சில துன்பங்களையும் எதிர்கொள்ளக்கூடும்.

2 /5

ராகு-கேதுவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு அத்தனை சாதகமாக இருக்கப்போவதில்லை. இந்த நேரத்தில், இவர்கள் அதிக சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொருளாதார நிலைமை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.   

3 /5

ராகு, கேதுவின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வில் பூகம்பத்தை கொண்டு வரக்கூடும். இவர்களின் வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் தொல்லைகள் தொடங்கலாம். நீங்கள் தேவையின்றி பயணிக்க வேண்டியிருக்கும். 

4 /5

ராகு, கேது சஞ்சாரம் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சிரமங்களை உருவாக்கும். ஒவ்வொரு இடத்திலும் முட்டி மோதியே பணிகளை செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். வர்த்தகர்கள் வணிகத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளக்கூடும். 

5 /5

மீன ராசியில் ராகு-கேதுவின் பிரவேசம் மீன ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. இதனால் தொழிலில் நஷ்டம் அதிகரித்து வேலையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வெளியாட்களிடம் இருந்தும் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆரோக்கியமும் கெடலாம்.