ஜனவரி மாத ராசிபலன்: இந்த ராசிகளுக்கு ராஜயோகம், நினைத்ததை நடத்தி முடிப்பார்கள்

January 2023 Monthly Horoscope: 2023 புத்தாண்டு பிறந்துவிட்டது. ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் பல பெரிய கிரகங்களின் ராசியில் மாற்றம் ஏற்படும். பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றமும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜனவரியில் ஏற்படும் கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகளில் சுப பலன்களும் சில ராசிகளில் அசுப பலன்களும் கிடைக்கும். 

1 /5

ஜனவரி 17, 2023 அன்று, மனிதர்களின் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிக்கடவுளான சனி பகவான் தனக்கு பிடித்தமான ராசியான கும்ப ராசியில் பெயர்ச்சியாகவுள்ளார். இதுதவிர செவ்வாய், சுக்கிரன், சூரியன் ஆகிய கிரகங்களும் தங்கள் ராசியை மாற்றும். இந்த கிரக மாற்றங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் அபரிமிதமான நல்ல பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.   

2 /5

புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் விசேஷமாக இருக்கப் போகிறது. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். ஆண்டின் முதல் மாதத்தில் நீங்கள் பெரிய அளவிலான பணம் சம்பாதிக்க அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. அனைத்து பக்கங்களிலிருந்தும் மகிழ்ச்சி உங்களைச் சூழ்ந்து கொள்ளும். உங்கள் மன அழுத்தங்கள் விலகும். பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த பயணங்கள் மன ரீதியாகவும், நிதி நிலையிலும் அனுகூலமான விளைவுகளை  ஏற்படுத்தும். 

3 /5

துலா ராசிக்காரர்களுக்கு ஆண்டின் முதல் மாதம் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களது பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் உயர் பதவியை அடையக்கூடும். செல்வச்செழிப்பில் அபரிமிதமான அதிகரிப்பு காணப்படும். புதிய வேலைகளைத் தொடங்க ஆண்டின் முதல் மாதம் சிறப்பான நேரமாக இருக்கும். 

4 /5

தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாண்டின் ஆரம்பம் அமர்க்களமாக இருக்கப்போகிறது. உங்களது பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணம் ஈட்ட அதிக வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் நீங்கள் வெற்றியைக் காண்பீர்கள். காதல் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது வீடு வாங்கும் யோகம் இப்போது உண்டாகும்.

5 /5

ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பணி இடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)