Nagar Panchami: நாக பஞ்சமி நாளில் நாகங்களை வழிபடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் செய்யும் சில தவறுகள் வாழ்க்கையில் கடுமையானதாக இருக்கும்.
நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்ற வேண்டும். புற்றை வணங்கி, புற்றுமண்ணை விபூதியைப் போல நெற்றியில் பூசிக் கொள்வது தோஷத்தை நீக்கும்.
மேலும் படிக்க | கால சர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாக பஞ்சமி ராகு கேதுவுக்கு உகந்த நாள்
நாகபஞ்சமி நாளில் சிவபெருமானை வழிபட வேண்டும். சிவனை வணங்காமல் நாக பஞ்சமி வழிபாடு முழுமையடையாது.
நாக பஞ்சமி நாளில் பூமியை தோண்டக்கூடாது. உண்மையில், பாம்புகள் தரையில் வாழ்கின்றன, நிலத்தை தோண்டுவது பூமிக்குள் வசிக்கும் பாம்புகளுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இன்று அதை செய்ய வேண்டாம். மேலும், ஒருபோதும் பாம்பை வேண்டுமென்றே துன்புறுத்தவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது.
நாகபஞ்சமி நாளில் பச்சை இலைகளை இலைகளை பறிக்காதீர்கள். இந்த நாளில் பச்சை நிற காய்கறிகள் கூட சாப்பிடக்கூடாது.
நாகபஞ்சமி அன்று மரங்களை வெட்டக்கூடாது, ஏனெனில் அவற்றில் பாம்புகளும் வாழ்கின்றன. மரங்கள் தான் நம் இருப்புக்கு அடிப்படை.
நாக பஞ்சமி நாளில் ஊசி நூல் பயன்படுத்தக்கூடாது. மேலும், மற்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.