கால சர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாக பஞ்சமி ராகு கேதுவுக்கு உகந்த நாள்

Nag Panchami 2022: கால சர்ப்ப தோஷத்தையும் ராகு கேது தோஷத்தையும் போக்கும் நாக பஞ்சமி நன்னாள் இன்று... பாம்புகளை வணங்குங்கள்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 2, 2022, 06:22 AM IST
  • நாக பஞ்சமி ராகு கேதுவுக்கு உகந்த நாள்
  • கால சர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாக வழிபாடு
  • பாம்பு புற்றுக்கு பால் வார்த்து பலனடையுங்கள்
கால சர்ப்ப தோஷத்தைப் போக்கும் நாக பஞ்சமி ராகு கேதுவுக்கு உகந்த நாள் title=

புதுடெல்லி: நாக பஞ்சமி நாளில் நாகங்களை வழிபடுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜாதகத்தில் உள்ள கால சர்ப்ப தோஷத்தை நிவர்த்தி செய்ய இந்த நாள் நல்லது என்று கருதப்படுகிறது, ஆனால் இந்த நாளில் செய்யும் சில தவறுகள் வாழ்க்கையில் கடுமையானதாக இருக்கும். தவறுகளை களைந்து நாக தோஷத்தை நல்லபடியாக போக்கிக் கொள்வோம். ஆடி மாதம் வளர் பிறைச் சதுர்த்தியில் மகளிர் விரதமிருந்து நாகங்களை வழிபடுவது நாக சதுர்த்தி விரதமாகும். ஆடி மாதம் வளர்பிறையில் சதுர்த்தியன்ரு நாக பஞ்சமி விரதம் தொடங்குகிறது. நாக சதுர்த்தியன்று நாக தேவதைக்குப் பூஜை செய்து, புற்றுக்குப் பால் ஊற்ற வேண்டும். புற்றை வணங்கி, புற்றுமண்ணை விபூதியைப் போல நெற்றியில் பூசிக் கொள்வது தோஷத்தை நீக்கும்.

நாக பஞ்சமி தினத்தன்று, நாகங்களின் தேவர்களாக கருதப்படும் அனந்தன், வாசுகி, கிஷகாலன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன், கார்க்கோடன், குளிஜன், பத்மன் ஆகிய நவ நாகங்களின் பெயரை உச்சரித்துக் கொண்டே புற்றுக்குப் பால் ஊற்ற வேண்டும். 

மேலும் படிக்க | பாம்புகள் வீட்டிற்குள் விளையாடும் ஒரு வினோத கிராமம்!

இந்த ஆண்டு நாக பஞ்சமி (Naga Panchami) இன்று (2022, ஆகஸ்ட் 2) செவ்வாய்கிழமை வருகிறது. இந்து மத நம்பிக்கைகளின்படி, நாகங்களின் தொடர்பு கடவுள்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. சிவ பெருமான் தனது உடலிலேயே நாகத்தை தரித்திருக்கிறார். விஷ்ணு பகவான், தனது படுக்கையையே நாகமாக கொண்டிருக்கிறார், விநாயகரோ, பாம்பை தனது உடலில் பூணூலாக அணிந்திருக்கிறார் என்பதில் இருந்து நாகங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல, தெய்வங்களுக்கும் முக்கியமானவை என்று உணர்த்தப்படுகிறது.

நாகங்களை வணங்கும் நாக பஞ்சமி நாளில் தெரிந்துக் செய்ய வேண்டிய விஷயங்களை மனதில் கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். நாக பஞ்சமி தினம் சர்ப்பங்களை மகிழ்விக்க சிறந்த நாளாகும். எனவே நாக பஞ்சமி தினத்தில் விரதம் இருப்பதும், புற்றுக்கு பால் ஊற்றி வணங்குவதும் நல்லது.

நாக பஞ்சமி அன்று, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதும், பாம்புகளை வழிபடுவதும் வாழ்வில் வளங்களை சேர்க்கும். நாக பஞ்சமியன்று நாகங்களை வணங்குவதால், சிவபெருமான், விஷ்ணு, லட்சுமி தேவி என அனைத்து கடவுள்களின் அருளும் கிடைக்கும். செய்ய வேண்டிய விஷயங்களை தெரிந்துக் கொண்டாலும், இந்த நாக பஞ்சமி நாளன்று செய்யக்கூடாத விஷயங்களை தெரிந்துக் கொண்டு தவிர்ப்பது நல்லது. 

மேலும் படிக்க | நாக பஞ்சமி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

நாக பஞ்சமி நாளன்று தவிர்க்க வேண்டிய விஷயங்கள்

நாக பஞ்சமி தினத்தன்று ஊசி நூலைப் பயன்படுத்தக் கூடாது, நாக பஞ்சமி தினத்தன்று இரும்பு பாத்திரங்களில் உணவு சமைக்க வேண்டாம்

ஒருவரின் ஜாதகத்தில் ராகு-கேது கிரகங்கள் அசுப நிலையில் இருந்தால் அவர்கள், நாக பஞ்சமியன்று விரதம் இருப்பதும், புற்றுக்கு பால் விடுவதும் நல்லது. நாக தேவதையை வணங்கி, அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக் கோஒரவும். இந்தப் பிறவியிலோ அல்லது முந்தைய பிறவியிலோ பாம்புகளை துன்புறுத்தியிருந்தாலோ அல்லது ஏதேனும் தீங்கு விளைவித்திருந்தால், மன்னிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது ராகு கேது கிரகங்களின் கோபத்தைத் தணிக்கும்.

நாக பஞ்சமி தினத்தன்று நிலத்தை தோண்டுவதை தவிர்க்கவும். குறிப்பாக பாம்பு புற்று இருக்கும் இடத்தில் நிலத்தை தோண்டக்கூடாது. பாம்புகளைக் கொல்லாதீர்கள், தீங்கு செய்யாதீர்கள். அவர்களை பிடித்து காட்டில் விடுங்கள்.

நாக பஞ்சமி நல்ல நேரம்
இந்த ஆண்டு நாக பஞ்சமி 2022, ஆகஸ்ட் இரண்டாம் நாளான இன்று (செவ்வாய்க் கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. காலை 06:05 மணி முதல் 08:41 மணி வரை சுமார் இரண்டரை மணி நேரம் சுப வேளையாக வழிபாடு நடைபெறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதி மாறும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News