நரைமுடியை கருப்பாக்கணுமா? இப்படி செஞ்சு பாருங்க, உடனடி பலன் கிடைக்கும்

Hair Care Tips: வயது அதிகரிக்க அதிகரிக்க, ​​முடி நரைக்கத் தொடங்கும். எனினும், இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என இவர்களிடமும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. இளநரை பிரச்சனைக்கு தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கூந்தலில் ரசாயனங்களின் பயன்பாடு எனப் பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்களால், கூந்தல் வயதுக்கு முன்பே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது. 

 

1 /5

இளநரை பிரச்சனையை போக்க மூலிகை தண்ணீர் ஒரு நல்ல நிவாரணமாக இருக்கும். மூலிகை நீர் மூலம் கூந்தலுக்கு ஊட்டம் கிடைப்பதோடு, கூந்தல் அடர்த்தியாகவும் கருப்பாகவும் மாறுகிறது.   

2 /5

தலைமுடியை கருப்பாக்க இளநீரை பயன்படுத்தலாம். இளநீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இதன் காரணமாக இளநீர் கூந்தல் மற்றும் உச்சந்தலைக்கு நன்மை பயக்கும். மேலும் இது நரைமுடி பிரச்சனையை சரிசெய்யவும் உதவுகிறது. உங்கள் தலைமுடியை மென்மையாகவும், பட்டுப் போலவும் ஆக்குவதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதைப் பயன்படுத்த, ஒரு தேங்காயை எடுத்து, அதன் தண்ணீரை எடுத்து, ஷாம்பு தடவிய பின் அந்த இளநீர் கொண்டு தலையைக் கழுவவும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முடி இழந்த பொலிவை மீண்டும் பெறக்கூடும்.

3 /5

பூந்தி கொட்டை மற்றும் நெல்லிக்காய் இரண்டும் கூந்தலுக்கு நன்மை பயக்கும். இது இளநரையையும் தடுக்கிறது. இதனுடன், பொடுகுத்தொல்லை, முடி உதிர்தல் ஆகிய பிரச்சனைகளையும் நீக்குகிறது.  இதை எப்படி பயன்படுத்துவது? இதை பயன்படுத்த, பூந்தி கொட்டை மற்றும் நெல்லிக்காயை இரவு தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் இந்த நீர் கொண்டு தலையை அலசவும். இப்படி செய்வதால் நரை முடி கருப்பாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

4 /5

வெங்காயம் உங்கள் முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல, உங்கள் தலைமுடியை கருமையாக்கவும் உதவுகிறது. அதை பயன்படுத்த, நீங்கள் வெங்காய சாறு எடுத்து, அதில் சிறிது சாதாரண தண்ணீர் சேர்க்கவும். இந்த வெங்காய நீர் கொண்டு தலைமுடியை சுத்தம் செய்தால், நல்ல வித்தியாசத்தை காணலாம். 

5 /5

பிளாக் டீ என்பது முடி நரைப்பதைத் தடுக்கும் மூலிகை மருந்தாக கருதப்படுகின்றது. இதற்கு முதலில் ஒரு கப் பிளாக் டீ தயார் செய்துகொள்ளுங்கள். பின்னர் அதன் தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும். ஷாம்பு போட்ட பிறகு இதை உங்கள் கூந்தலில் கண்டிஷனராக பயன்படுத்தவும். இது உங்கள் தலைமுடியை ஸ்டைலாகவும் கருமையாகவும் மாற்ற உதவும். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)