MANNANGATTI since 1960: டியூட் விக்கி இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் கொடைக்கானலில் தொடங்கி உள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தென்னிந்திய படங்களை தொடர்ந்து பாலிவுட்டிலும் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.
'ஜவான்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் தனது இரண்டாவது ஹிந்தி படத்தில் ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் தமிழிலும் நயன்தாரா பல படங்களில் நடித்து வருகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் 'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி உள்ளது.
பிரபல யூடியூபர் டியூட் விக்கி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது கொடைக்கானலில் துவங்கியுள்ளது.
படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து படங்களைப் பகிர்ந்துள்ளது. இவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
'மன்னாங்கட்டி சின்ஸ் 1960' படத்தில் நயன்தாரா, யோகி பாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் மற்றும் பலர் நடிக்கின்றனர். சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.