தினசரி எண்ணிலடங்கா நிகழ்வுகளும், சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருந்தாலும், திட்டமிட்ட அல்லது எதிர்பாரா நிகழ்வுகளும், சம்பவங்களுமே வாழ்க்கையின் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. அவற்றில் சில உங்களுக்காக…
இன்று நவம்பர் 10. இதற்கு முந்தைய ஆண்டுகளில் இதே நாளில் நடைபெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களின் தொகுப்பு இது. வரலாற்றை வளமையுடன் நினைவுபடுத்தும் ஒரு முயற்சி…
(Photographs:WION)
1885 ஜெர்மன் பொறியாளர் கோட்லீப் டைம்லர்-இன் (Gottlieb Daimler) மகன் பால் (Paul) மோட்டார் சைக்கிள் ஓட்டினார். இவர் தான் உலகின் முதல் பைக்கர் ஆவார்.
1970 சீனப் பெருஞ்சுவர் பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட தினம் நவம்பர் 10, 1970.
1983 கணினிகளை இயக்குவதற்கான இயக்க முறைமை விண்டோஸ் 1.0 ஐ (Windows 1.0) அறிமுகப்படுத்தினார் பில் கேட்ஸ்
2002 அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான உலக அறிவியல் தினமாக நவம்பர் 10 அறிவிக்கப்பட்டு, அதை முதன்முறையாக கொண்டாடுகிறது யுனெஸ்கோ (UNESCO).
2006 இலங்கை தமிழ் அரசியல்வாதி நடராஜா ரவீராஜ் படுகொலை செய்யப்பட்டார்.