சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.... பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும்

Sukran Peyarchi Palngal: ஜனவரி மாதம் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியால் அட்டகாசமான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Sukran Peyarchi Palngal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களுக்கும் பிரத்யேகமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. செல்வம், செழிப்பு, ஆடம்பரம், திருமண சுகம், வசீகரம், பேச்சாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமான சுக்கிரன்  ஜனவரி 28, 2025 செவ்வாய்க்கிழமை காலை 7:12 மணிக்கு, கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். பல வித வெற்றிகளை காண்பார்கள். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.

2 /11

செல்வம், செழிப்பு. ஆடம்பரம், திருமண சுகம், வசீகரம், பேச்சாற்றல், அறிவாற்றல் போன்றவற்றின் அதிபதியாக இருப்பவர் சுக்கிரன். ஒருவர் வாழ்வில் சுக்கிரன் சுப ஸ்தானத்தில் இருந்தால், அவர் தன் வாழ்நாளில் பல வித உச்சங்களைத் தொடுகிறார். அவரது ஆளுமை அனைவரையும் கவரும் வண்ணம் அமைகிறது.

3 /11

தற்போது சுக்கிரன் கும்ப ராசியில் உள்ளார். ஜோதிட கணக்கீடுகளின்படி, ஜனவரி 28, 2025 செவ்வாய்க் கிழமை காலை 7:12 மணிக்கு, சுக்கிரன் கும்ப ராசியிலிருந்து விலகி மீன ராசியில் பெயர்ச்சி ஆகிறார். 

4 /11

சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது நிதி நிலை மேம்படும். செழுமை அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராச்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

5 /11

ரிஷபம்: இந்த மாதம் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையும் மகிழ்ச்சியும் இருக்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் சேமிக்க வயப்பு கிடைக்கும். ஆடம்பரங்கள் மற்றும் பொருள் வசதிகள் அதிகரிக்கும். கலை, இசை, பேஷன் போன்ற படைப்புத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.

6 /11

கடகம்: மீனத்தில் சுக்கிரனின் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இந்த நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டமும் மன நிம்மதியும் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். திடீர் நிதி ஆதாயம் உண்டாகும். குடும்ப வாழ்வில் ஒற்றுமை நிலவும். காதல் உறவுகளில் ஸ்திரத்தன்மையும் ஆழமும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, அமைதி, நல்லிணக்கம் நிறைந்த சூழல் இருக்கும். பணியிடத்தில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கு. ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

7 /11

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி பணம் மற்றும் முதலீடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமாக இருக்கும். திடீர் பணவரவு ஏற்படும். வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகளைப் பெற வாய்ப்புள்ளது. முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அனுபவிப்பீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

8 /11

துலாம்: துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரன் பெயர்ச்சி உங்களுக்கு மிகுந்த பலனைத் தரும். ஆரோக்கியம் மேம்படும். உங்கள் ஆளுமையில் ஈர்ப்பு அதிகரிக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலை மேம்படும். புதிய முதலீடுகள் நல்ல லாபம் தரும். பணம் சம்பாதிக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். ஆடம்பரங்கள் மற்றும் வசதிகள் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான பணிகளில் வெற்றி பெறுவீர்கள்.

9 /11

மீனம்: மீன ராசியில் சுக்கிரன் உச்ச ஸ்தானத்தில் அமர்வதால் இந்த சுக்கிரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் நம்பிக்கையும் கவர்ச்சியும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிப்பீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் தொழிலில் புதிய உயரங்களை அடையும் நேரம் இது. ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் தியானத்தில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்மீகப் பணிகளிலும் தொண்டுகளிலும் ஆர்வம் காட்டுவீர்கள்.

10 /11

சுக்கிரன் அருள் பெற, ‘ஹிமகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும் ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்’ என்ற ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம்.

11 /11

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.