தபால் நிலைய PPF மற்றும் SSA கணக்கில் ஆன்லைனில் டெபாசிட் செய்வது எப்படி?

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80C இன் கீழ், இந்த திட்டங்களில் வரி விலக்கு கிடைக்கின்றது. சமீபத்தில் டக்பே டிஜிட்டல் பேமென்ட்ஸ் பயன்பாட்டை (DakPay Digital Payments app) அரசாங்கம் அறிமுகம் செய்துள்ளது. 

  • Feb 22, 2021, 12:40 PM IST

தபால் நிலையங்களில் பல வகையான சிறிய சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அவற்றில், பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund – PPF) மற்றும் சுகன்யா சமிர்தி கணக்கு (Sukanya Samriddhi Account – SSA) என்ற இரண்டு திட்டங்கள் உள்ளன. 

1 /8

தபால் அலுவலகம் மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி (IPPB) பயனர்களும் இதைப் பயன்படுத்தலாம். இந்தியா போஸ்ட் மற்றும் IPPB வழங்கும் ஆன்லைன் நிதி மற்றும் ஆதரவு வங்கி வசதிகளை டக்பே ஆப் ஆதரிக்கிறது. 

2 /8

இந்த கணக்குகளைத் திறக்க நீங்கள் ஒரு முறை மட்டும் தபால் நிலையத்திற்குச் சென்றால் போதுமானது, அதன் பிறகு நீங்கள் ஆன்லைனிலேயே உங்கள் கணக்கை நிர்வகிக்க முடியும். ஆன்லைனில் நேரடியாக உங்கள் கணக்கில் நிதிகளை டெபாசிட் செய்யலாம். ஆனால் எப்படி? அதற்கான வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்:

3 /8

IPPB பயன்பாட்டைப் பயன்படுத்தி PPF அல்லது SSA கணக்கில் ஆன்லைனில் பணத்தை டெபாசிட் செய்வதற்கான வழிமுறைகள், செயல்முறையைத் தொடங்குவதற்கு முன், முதலில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து IPPB கணக்கில் பணத்தைச் சேர்க்க வேண்டும்.

4 /8

இப்போது ‘DOP Products’ பிரிவின் கீழ், நீங்கள் ஆன்லைனில் பணத்தை டெபாசிட் செய்ய விரும்பும் PPF, சுகன்க்யா சமிரதி அல்லது RD கணக்கு எண்ணிலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்கள் PPF, சுகன்யா சம்ரிதி அல்லது RD கணக்கு எண்ணை உள்ளிட்டு பின்னர் DOP வாடிக்கையாளர் ஐடியை சரியாக உள்ளிடவும்.

5 /8

உங்கள் கட்டணம் IPPB மொபைல் பயன்பாடு வழியாக வெற்றிகரமாக மாற்றப்பட்டதும், பயன்பாட்டிலிருந்து ஒரு அறிவிப்பைப் பெறுவீர்கள். இந்தியா போஸ்ட் வழங்கும் வெவ்வேறு தபால் நிலையத் திட்டங்களில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை நீங்கள் தேர்வுசெய்து IPPB மொபைல் பயன்பாட்டின் நிலையான சேமிப்புக் கணக்கு வழியாக வழக்கமான வைப்புத்தொகையைச் செலுத்தலாம்.

6 /8

IPPB பயன்பாட்டைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கும் நிதியை மாற்ற முடியும். பயன்பாட்டின் மூலம் நிதி பரிமாற்றத்தைத் தொடங்குவதற்கு முன், பயனாளியின் கணக்கு எண் மற்றும் IFSC குறியீட்டை உறுதிப்படுத்த வேண்டும்.

7 /8

ஜனவரி-மார்ச் காலாண்டில், PPF மற்றும் சுகன்யா சம்ரிதி உள்ளிட்ட சிறிய சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் எதுவும் மாறவில்லை. 7.1 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தை பொது வருங்கால வைப்பு நிதியம் (PPF) தொடர்ந்து வழங்கும். 

8 /8

சுகன்யா சம்ரிதி யோஜனா பெண்கள் குழந்தைகள் சேமிப்பு திட்டம் நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 7.6 சதவீத வட்டியை வழங்கும். ஐந்தாண்டு தொடர்ச்சியான வைப்பு வட்டி விகிதம் முறையே 5.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.