Over Eating Dry Grapes Side Effects: திராட்சை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும் என்பதுடன், இதில் உள்ள சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் நீங்கள் அதை அதிகமாக உட்கொண்டால், அது மிகவும் தீங்கு விளைவிக்கும்.
உலர் பழங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. திராட்சையும் இவற்றில் ஒன்று. இதனை தினமும் உட்கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதுமட்டுமின்றி, இதனை உட்கொள்வதன் மூலம் பல நன்மைகளையும் பெறுவீர்கள். ஆனால் அளவுக்கு அதிகமாக உண்பது நல்லதல்ல
உலர் திராட்சையை உட்கொண்டால், நீரிழப்பு முதல் சுவாச சிக்கல்கள் என பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உலர் திராட்சையில் நிறைந்துள்ள சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன, ஏனெனில் இதில் அபரிமிதமான கால்சியம் உள்ளது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்ல பலன்களைக் கொடுக்கும் உலர் திராட்சையை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், இருதய நோயின் அபாயத்தையும் பெருமளவு குறைக்கலாம்
நீரிழிவு நோயாளிகள் திராட்சையை அதிக அளவில் உட்கொண்டால், அது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக்கூடும். எனவே, எவ்வளவு தான் நல்லது என்றாலும் அளவுடன் உண்பதே நல்லது
உலர் திராட்சையை அதிகமாக உட்கொள்வதால், சில நேரங்களில் சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே சுவாசம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே திராட்சையை உட்கொள்ள வேண்டும்.
திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே அதை அதிகமாக உட்கொண்டால், நீரிழப்பு பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
திராட்சையை அதிகமாக உட்கொள்வதால், நீங்கள் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தோல் ஒவ்வாமை பிரச்சனையும் ஏற்படலாம்
உலர் திராட்சையை அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் எடையை பாதிக்கும். அதிக அளவு குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் இதில் காணப்படுகின்றன, இது எடையை வேகமாக அதிகரிக்கும்.