Alert: Corona Virus உடலை விட்டு சென்றாலும், அதன் பக்க விளைவுகள் நமக்கு ஆபத்தாக இருக்கலாம்…

கொரோனா வைரஸ் தொற்றுநோய் நம் அனைவரையும் பாடாய் படுத்தி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர், தொற்றிலிருந்து விடுபட்டாலும், இந்த தொற்றால் ஏற்படும் பக்க விளைவுகள் பலரை ஆட்டிப்படைக்கின்றன. 

உடலின் மிக முக்கிய பாகங்கள் கூட இந்த வைரசின் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சில பக்க விளைவுகளை இங்கு காணலாம்.

1 /5

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, சில நோயாளிகளுக்கு நிரந்தர காது கேளா பிரச்சினை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக காதுகளில் பிரச்சனை ஏற்படுபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு ஆஸ்துமா நோயாளி, பின்னர், அவரது செவிப்புலன் திறன் திடீரென இழந்தார்.

2 /5

COVID-19 தொற்றால் தூண்டப்பட்ட நரம்பு பாதிப்பால் ஒரு சிறுமியின் கண் பார்வை மங்கலாகியுள்ளதாக டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS) கூறியுள்ளது. COVID-19 தொற்றின் இப்படிப்பட்ட பக்கவிளைவு முதன் முறையாக கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

3 /5

COVID-19 நோய்த்தொற்று இளைஞர்களிலும், பக்கவாதம், வலிப்புத்தாக்கங்கள் மற்றும் குய்லின்-பார் நோய்க்குறி ஆகியவற்றை ஏற்படுத்தும். இது தற்காலிக முடக்கத்தையும் ஏற்படுத்தலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. COVID-19 பார்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோயை உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.

4 /5

COVID-19 உடன் பெரும்பாலும் தொடர்புடைய நிமோனியா வகை, நுரையீரலில் உள்ள சிறிய காற்றுப் பைகளுக்கு (அல்வியோலி) நீண்டகால சேதத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக ஏற்படும் வடு திசு நீண்ட கால சுவாச பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

5 /5

COVID-19-லிருந்து குணப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட இமேஜிங் சோதனைகள், லேசான COVID-19 அறிகுறிகளை மட்டுமே அனுபவித்தவர்களில் கூட, இதய தசையில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. இது எதிர்காலத்தில் இதய செயலிழப்பு அல்லது பிற இதய சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.