பூமியில் உலாவ Uber, விண்வெளியில் உலாவ ISRO-வை கூப்பிடுங்கள்: Anand Mahindra பெருமிதம்

ISRO News: இஸ்ரோ 2021 ஆம் ஆண்டின் தனது முதல் செயல்திட்டமான PSLV-C51/Amazonia-1 ஐ ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த சரியான நேரத்தில் விண்ணில் செலுத்தியது. ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்திலிருந்து பிரேசில் செயற்கைக்கோளை முதல் முறையாக ஏந்திக்கொண்டு இந்தியாவின் ராக்கெட் விண்வெளிக்கு புறப்பட்டது.

இஸ்ரோவின் இந்த அற்புதமான வெற்றியைக் குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, அடுத்த முறை மற்ற நாடுகள் தங்கள் செயற்கைக்கோளை விண்வெளியில் சவாரிக்கு அனுப்ப விரும்பினால், அவர்கள் UBER-ஐ அல்ல, ISRO-வைக் கூப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.

1 /5

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் செய்தியை வெளியிட்டதுடன் செயற்கைக்கோள் ஏவப்பட்ட அந்த நொடிகளின் சில சிறந்த படங்களையும் பகிர்ந்துகொண்டார். செயற்கைக்கோளை ஏவுவதற்கான நேரம் பிப்ரவரி 28 காலை 10.24 மணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. (ஜீ பிசினஸ்)

2 /5

இஸ்ரோ ராக்கெட் சென்னையிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்டது. இப்போது ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் சென்னையின் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் (எஸ்.கே.ஐ) சதீஷ் தவான் எஸ்ஏடி-யும் (SD SAT) அடங்கும். (புகைப்படம் - ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் கணக்கு)

3 /5

இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட பிரேசிலின் முதல் செயற்கைக்கோள் அமசோனியா -1 ஆகும். பி.எஸ்.எல்.வி-சி 51 / அமசோனியா -1 என்பது இஸ்ரோவின் வணிகப் பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்) இன் முதல் அர்ப்பணிப்பு வணிக பணித்திட்டமாகும். இது விண்வெளித் துறையின் கீழ் உருவாக்கப்பட்ட இந்திய அரசு நிறுவனமாகும். (புகைப்படம் - ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் கணக்கு)

4 /5

இஸ்ரோ இன்று செலுத்திய செயற்கைகோள்களில், மூன்று கல்வி நிறுவனங்களுடையவை, 14 செயற்கைக்கோள்கள் NSIL-லினுடையது, ஒரு செயற்கைக்கோள் ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவினுடையது. (புகைப்படம் - ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் கணக்கு)

5 /5

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அளித்த தகவல்களின்படி, இது பி.எஸ்.எல்.வியின் 53 வது பணித்திட்டமாகும். இன்று அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் ரிமோட் சென்சிங் தரவுகளையும், அமேசான் பகுதியில் உள்ள வனப்பகுதியில் நடக்கும் இயற்கை வளங்களின் திருட்டையும் கண்காணிக்கும். (புகைப்படம் - ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் கைப்பிடி)