Budget 2021: விவசாயிகளுக்கு நற்செய்தியை ஏந்தி வருகிறது பட்ஜெட், PM Kisan தொகை உயரக்கூடும்

Budget 2021: மத்திய பட்ஜெட்டின் நாள் நெருங்கி வருவதால், மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது. பிப்ரவரி 1 ம் தேதி நாட்டின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். ராணுவ வீரர்கள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் தங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஏதாவது சிறப்பு சலுகைகள் இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

நிதியமைச்சரும் இது குறித்து சுட்டிக்காட்டியியுள்ளார். ஆகையால் இந்த முறை பட்ஜெட் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று பரவலாக நம்பப்படுகின்றது.

1 /6

பிப்ரவரி 1 ம் தேதி சமர்ப்பிக்கப்படவுள்ள பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மூன்றாவது பட்ஜெட்டாகும். தங்களுக்கு அனுகூலமான விஷயங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் என்று விவசாயிகள் நம்புகின்றனர். ஊடக அறிக்கையின்படி, பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் தொகையின் அளவை அரசு அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, ​​இந்த திட்டத்தின் மூலம், ஆண்டுதோறும் 6,000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக மாற்றப்படுகிறது. இப்போது இந்த தொகையை அதிகரிக்கக்கூடும் என செய்தி வந்துள்ளது.  

2 /6

விவசாய மற்றும் விவசாய செலவினங்களை பூர்த்தி செய்ய இந்த தொகை மிகக் குறைவு என்று விவசாயிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். ஆண்டுக்கு ரூ .6,000 என்றால் மாதத்திற்கு ரூ .500 என்று வருகிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். 1 ஏக்கரில் நெல் சாகுபடிக்கு ரூ .3-3.5 ஆயிரம் செலவாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர். கோதுமை சாகுபடிக்கு 2-2.5 ஆயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. இதை விட அதிகமான நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ .6,000 தொகை மிகக் குறைவு. எனவே, செலவுகளைச் சமாளிக்க இந்த தொகையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3 /6

2019-20 நிதியாண்டில் விவசாயத்திற்கான ஒதுக்கீடு ரூ .1.51 லட்சம் கோடியாக இருந்தது. இது 2020-21 நிதியாண்டில் 1.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது. இது தவிர, கிராமப்புற மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு 2020-21ல் ரூ .1.44 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 2019-20ல் சுமார் ரூ .1.40 லட்சம் கோடியாக இருந்தது. பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், 2019-20ல் 9682 கோடி ரூபாயாக இருந்த ஒதுக்கீடு 2020-21-ல் 11,127 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2019-20ல் ரூ .14 ஆயிரம் கோடியிலிருந்து 2020-21ல் 15,695 கோடியாக ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது.

4 /6

விவசாயிகளுக்கு உதவுவதற்காக டிசம்பர் 1, 2018 அன்று பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தை அரசு தொடங்கியது. இத்திட்டத்தில் இதுவரை ஏழு தவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ .18,000 கோடியை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 10.60 கோடி விவசாயிகளுக்கு இதுவரை 95,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

5 /6

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் 2021 இன் புதிய பட்டியலை அதிகாரப்பூர்வ வலைத்தளமான pmkisan.gov.in –ல் சென்று பார்க்கலாம். இது தவிர, நீங்கள் ஒரு பயனாளியாக இருந்தால், ஆன்லைனில் உங்கள் நிலையை சரிபார்க்கவும், உங்கள் பெயரை ஆன்லைனில் சேர்க்கவும் விண்ணப்பிக்கலாம். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் தொடர்ந்து லாக்டௌன் விதிக்கப்பட்டதால், பட்வாரி / வருவாய் துறை அதிகாரிகள் கிராமங்கள் மற்றும் தஹசில்களுக்கு சென்று பார்க்க முடியவில்லை. எனவே ஆன்லைனில் பெயர்களைச் சேர்க்கும் பணியை அரசாங்கம் எளிதாக்கியுள்ளது.  

6 /6

இது மோடி அரசின் மிகப்பெரிய உழவர் திட்டமாகும். எனவே விவசாயிகளுக்கு பல வகையான வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஹெல்ப்லைன் எண் உள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் விவசாயிகள் நேரடியாக விவசாய அமைச்சகத்தை தொடர்பு கொள்ளலாம். பி.எம். கிசான் கட்டணமில்லா எண்: 18001155266 பி.எம் கிசான் ஹெல்ப்லைன் எண்: 155261, பி.எம். கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011—23381092, 23382401, பி.எம். கிசானின் மற்றொரு ஹெல்ப்லைன் எண்: 0120-6025109. மின்னஞ்சல் முகவரி: pmkisan-ict@gov.in ஆகும்.