முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் 88வது பிறந்தநாள் இன்று. அவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் அனுபம் கேரின் மன்மோகன் சிங் அவதாரம் இதோ...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்த நாளன்று அவருக்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான மன்மோகன் சிங்கின் 88-வது பிறந்த தினமான இன்று அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
தி ஆக்ஸிடென்ஷியல் பிரைம் மினிஸ்டர் என்ற புத்தகத்தை மையமாக வைத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்ன் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் மன்மோகன் வேடத்தில் மூத்த நடிகர் அனுபம் கேர் நடித்திருக்கிறார்.
நிஜ மன்மோகன் சிங்கை பார்த்திருப்பீர்கள். அவரைப் போல ஒருவர் நடித்தால் எப்படி இருக்கும்? இதோ புகைப்படத் தொகுப்பில் பாருங்கள்...
நிழலும் நிஜமும் நம் கண் முன்னே இருந்தாலும், நிஜம் எப்போதும் போலவே இருக்கும். நிழல் தான் நீண்டு, குறுகி, வளைந்து சூரியன் செல்லும் திசைக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருக்கும்...
அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் தெரிகிறதா?
ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டரின் குடும்பம்
கதாபாத்திரத்தை செம்மையாக செய்து காண்பித்த அனுபம் கெர்.
அமைதியாக இருப்பதாக நடிக்க முடியுமா? இல்லை உணர்ந்து வாழலாம்...
பல்வேறு கதாபாத்திரங்களையும் அப்படி வாழ்ந்து காட்டும் அனுபம் கெட் மிகச் சிறந்த நடிகர் பட்டியலில் முதல் வரிசையில் இடம் பிடிப்பவர்...
பிரதமராக அவதாரம் எடுத்தால், பிரதமராக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டாமா?
அரசியல் தலைவர்களில் பலரின் வேடத்திற்கு பொருத்தமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்...