Alert: உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க PNB அளிக்கும் இந்த tips கண்டிப்பாக உதவும்!!

ஆன்லைன் மோசடி வழக்குகள் வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவர்கள் தாங்கள் ஒரு வங்கி அல்லது பணம் செலுத்தும் நிறுவனத்தின் அதிகாரிகள் என்று கூறி போலி அழைப்புகளை செய்கிறார்கள். விவரங்களைப் பெற்று அதன் பிறகு மோசடியில் ஈடுபடுகிறார்கள். 

.நீங்கள் ஒரு சிறிய தவறை செய்தால் கூட உங்கள் கணக்கில் உள்ள மொத்த தொகையும் காலியாகிவிடும். பொதுத்துறையின் பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 /7

மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் பெறப்பட்ட செய்திகளை மறந்தும் திறக்க வேண்டாம் என்று PNB தெரிவித்துள்ளது. இந்த மெசேஜ்கள் மூலம், ஒரு ட்ரிக் வாயிலாக மோசடி செயலிகள் தானாகவே உங்கள் தொலைபேசியில் நிறுவப்படும். இவை அனைத்தும் third part app-களாகும். அவை உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகளிலிருந்து விலகி இருக்குமாறு PNB வாடிக்கையாளர்களைக் கோரியுள்ளது. மேலும், PNB சில பாதுகாப்பு உதவிக்குறிப்புகளையும் வழங்கியுள்ளது.

2 /7

எந்தவொரு மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் அல்லது வலைத்தளத்தையும் திறப்பதற்கு முன், அது எங்கிருந்து வந்தது என்பதைச் சரிபார்க்கவும். Link வங்கியால் அனுப்பப்பட்டதா இல்லையா என்பதை கண்டிப்பாக உறுதிபடுத்திக்கொள்ளவும். பெரும்பாலும் இதுபோன்ற link-குகள் வங்கி link-குகளைப் போலவே இருக்கும். அவற்றைத் திறக்க HTTPS ஐச் சரிபார்க்கவும். உங்கள் கணக்கு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு தகவல்களைப் பகிர வேண்டாம்.

3 /7

ஆன்லைனில் பணம் செலுத்தும் போது உங்கள் கார்ட் தகவலை வேறு எந்த நபருக்கும் கொடுக்க வேண்டாம். Wi-fi வழியாக சாதனத்தைப் பயன்படுத்தி பணம் செலுத்தும்போது அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கான ஆபத்து அதிகரிக்கிறது. பொது வைஃபை பயன்படுத்தி ஒருபோதும் பணம் செலுத்தக்கூடாது. பரிவர்த்தனை முடிந்ததும் இணைய வங்கியிலிருந்து லாக்-ஔட் செய்ய மறக்காதீர்கள். உங்களுடையது அல்லாமல் மற்றொரு சாதனத்திலிருந்து லாக்-இன் செய்தால், ப்ரௌசர் ஹிஸ்டரியை கண்டிப்பாக டெலீட் செய்யவும்.

4 /7

மால்வேர் தாக்கும் எந்த மென்பொருளையும் நிறுவ வேண்டாம். நல்ல ஆன்டி வைரஸை நிறுவவும். போலி வைரஸ் தடுப்பு பாப்-அப்களை ஒருபோதும் கிளிக் செய்ய வேண்டாம். மொபைல் அல்லது மடிக்கணினியின் இயக்க முறைமையைப் புதுப்பிக்கவும். திருட்டு (பைரேடட்) பயன்பாடுகள் அல்லது மென்பொருளை எப்போதும் தவிர்க்கவும்.

5 /7

ஸ்பைவேரிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியமும் உள்ளது. இது உங்கள் தனிப்பட்ட விவரங்களைத் திருடும் புதிய வகை ப்ரோக்ராமாகும். ஸ்பைவேரும் ஒரு ப்ரோக்ராமைப் போல செயல்படுகிறது. பயனரை உளவு பார்க்க இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது, பேக்-க்ரௌண்டில் மறைந்து கண்காணிக்கிறது. இது உங்கள் ஐடி, கடவுச்சொல், கிரெடிட் கார்டு எண் மற்றும் வலைத்தளங்களை இயக்கும் பழக்கம் ஆகியவற்றைப் படிக்கிறது. ஸ்பைவேரால் உங்கள் கீ-போர்ட், வீடியோ மற்றும் மைக்ரோஃபோனையும் பதிவு செய்ய முடியும்.

6 /7

இந்த மோசடியைத் தவிர்க்க ஸ்பைவேரில் கவனமாக இருக்க வேண்டும் என்று PNB எச்சரித்துள்ளது. உங்கள் அழைப்பு வரலாறு, செய்திகள் அல்லது பிற முக்கியமான விஷயங்களுக்கான அணுகல் கோரப்படும் செயலிகள், தீம்களை நிறுவ வேண்டாம். வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருட ஸ்பைவேர் உங்கள் தரவைப் பயன்படுத்தலாம். அத்தகைய சூழ்நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

7 /7

வாடிக்கையாளர் சேவையை அழைத்து கார்டை பிளாக் செய்யவும். இதற்குப் பிறகு, விரைவில் போலீசில் புகார் அளித்து, அதன் reference number அல்லது புகாரின் புகைப்படத்தை எடுத்து சம்பந்தப்பட்ட வங்கியுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சிக்கல் தீர்க்கப்படாவிட்டால், ரிசர்வ் வங்கியில் புகார் செய்யுங்கள்.