பெரும்பாலும் நாம் ஒரு காரை வாங்கும்போது, விலை, அம்சங்கள், தோற்றம் மற்றும் மைலேஜ் குறித்து கவனம் செலுத்துகிறோம். ஆனால் மிகச் சிலரே காரின் மிக முக்கியமான அம்சமான பாதுகாப்பு அம்சத்தில் கவனம் செலுத்துகிறார்கள். அதிகரித்து வரும் சாலை விபத்துக்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், காரில் பாதுகாப்பு அம்சங்கள் மிக முக்கியமானவையாகின்றன.
நீங்கள் வெளியே காரில் செல்லும்போது நீங்களும் உங்கள் குடும்பமும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முகவும் அவசியமாகும். ஆகையால் நீங்கள் ஒரு புதிய காரை வாங்கும்போது, காரின் பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக்குகள், கார் விபத்துக்குள்ளானால் உங்களைக் காக்கக்கூடிய பாதுகாப்பு அம்சங்கள், நீங்கள் காரில் எவ்வளவு பாதுகாப்பாக பயணிக்க முடியும் ஆகிய தகவல்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இந்தியாவில், பாதுகாப்பின் அடிப்படையில் மிகவும் நேர்த்தியான ஐந்து கார்களைப் பற்றி இங்கே காணலாம்.
குளோபல் என்சிஏபி மதிப்பீட்டில், நாட்டின் கார் நிறுவனமான மஹிந்திராவின் XUV 300 சிறந்த மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த காருக்கு வயதுவந்தோரின் பாதுகாப்பிற்காக (Adult Protection) 5 நட்சத்திர மதிப்பீடும், குழந்தை பாதுகாப்புக்கு 4 நட்சத்திரமும் கிடைத்துள்ளன. NCAP சோதனையின்போது, வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக 17 இல் 16.42 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக 49 இல் 37.44 என மதிப்பீடுகள் கிடைத்தன. குளோபல் என்சிஏபி மதிப்பீட்டின்படி XUV300 நாட்டின் மிகவும் பாதுகாப்பான கார் ஆகும். இது குளோபல் என்சிஏபி-யிடமிருந்து ஃபர்ஸ்ட் எவர் சாய்ஸ் விருதைப் பெற்றுள்ளது.
நாட்டின் மற்றொரு பெரிய கார் நிறுவனமான டாடாவின் ஹேட்ச்பேக் கார் ஆல்ட்ரோஸும் குளோபல் என்சிஏபி-யிடமிருந்து நல்ல மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது வயதுவந்தோரின் பாதுகாப்பிற்காக 5 நட்சத்திரங்களையும், குழந்தை பாதுகாப்புக்காக 3 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. வயதுவந்தோர் பரிசோதனையின் போது இந்த கார் 17 இல் 16.13 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சோதனையின் போது 49 இல் 29 மதிப்பீடுகளையும் பெற்றது. (Photo: AutoCar India)
டாடாவைச் சேர்ந்த மற்றொரு கார், குளோபல் என்சிஏபி மதிப்பீட்டில் மூன்றாம் இடத்தில் நல்ல எண்களைப் பெற்றது. டாடாவின் சப் காம்பாக்ட் எஸ்யூவி நெக்ஸன் வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக 5 நட்சத்திர மதிப்பீட்டையும், குழந்தை பாதுகாப்புக்கு 3 நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றது. சோதனையின்போது, இந்த கார் வயது வந்தோருக்கான பாதுகாப்பில் 17 இல் 16.06 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 49 இல் 25 என மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
நான்காவது இடத்தில் உள்ள மஹிந்திராவின் எம்யூவி கார் மராசோவிற்கும் குளோபல் என்சிஏபி நல்ல மதிப்பீட்டை வழங்கியுள்ளது. குளோபல் என்.சி.ஏ.பி இந்த காருக்கு வயதுவந்தோர் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 2 நட்சத்திரங்களையும் வழங்கியுள்ளது. சோதனையின்போது, இந்த கார் வயது வந்தோருக்கான பாதுகாப்பிற்காக 17 எண்களில் 12.85 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 49 இல் 22.22 என்ற விதத்தில் புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுசுகியின் ஐந்தாவது பெரிய துணை நிறுவனமான ப்ரெஸாவுக்கு குளோபல் என்சிஏபி 4 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. இந்த காருக்கு வயதுவந்தோர் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 2 நட்சத்திரங்கள் மதிப்பீடு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், மாருதியின் எம்யூவி எர்டிகாவுக்கு 3 நட்சத்திர மதிப்பீடு கிடைத்துள்ளது. வயதுவந்தோர் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் எர்டிகாவுக்கு 3 நட்சத்திரங்கள் மதிப்பீடு கிடைத்துள்ளது. (Photo: CarWale.com)