Bank Fraud: அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்; பாதுகாத்துக் கொள்வது எப்படி

தற்போது சைபர் குற்றவாளிகள், நூதன முறையில், பல வழிகளில் மக்களை ஏமாற்றுகிறார்கள். இலவச அல்லது மலிவான சலுகையை வழங்குவதாக ஏமாற்றுகிறார்கள், இதனால், கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்கும் நிலை ஏற்படுகிறது. ஆன்லைன் கட்டண முறையை பயன்படுத்தும் போதும் சரி, சமூக ஊடகத்தை பயன்படுத்தும் போது சரி, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

1 /5

வாட்ஸ்அப்பில் தெரியாத எண்ணிலிருந்து குரல் அழைப்பு வந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அழைப்பவர் உங்களை ஏமாற்றக்கூடும். அதனால், உடனே எண்ணை ப்ளாக் செய்யவும்

2 /5

UPI மூலம் யாருக்கும் எளிதாக பணம் அனுப்பலாம் அல்லது பெறலாம். யுபிஐ மூலம், சைபர் குற்றவாளிகள், டெபிட் கணக்கிற்கான இணைப்பை அனுப்புகிறர்கள். இந்த இணைப்பை கிளிக் செய்தால், அவர்களுக்கு உங்கள் போனை ஹாக்கிங் செய்வது எளிதாகிறது. எனவே  அந்நியர்கள் அனுப்பும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.  

3 /5

மோசடி செய்பவர்கள் QR குறியீட்டின் மூலம் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர்.  அந்நியர்களிடம் இருந்து வரும் QR குறியீட்டை ஒரு போது கிளிக் செய்ய வேண்டாம். இதன் மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க ஹாக்கர்கள் முயற்சிப்பார்கள்

4 /5

கொரோனா வைரஸ் தொடர்பான எந்த இணைப்பையும் கவனமாகக் கிளிக் செய்க. தற்போது, ​​சைபர் குண்டர்கள், கொரோனா தொடர்பான தகவல்கள் அல்லது உதவி செய்வதாக கூறி மோசடி செய்கின்றனர்

5 /5

சமூக ஊடகங்களில் தேவையற்ற மின்னஞ்சல், எஸ்எம்எஸ் அல்லது செய்தியை ஓபன் செய்வதையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். அனுப்புநரின் முகவரி இருந்தாலும், இணைப்பை கிளிக் செய்வதில் மிகவும் கவனமாக இருங்கள்.