SBI அளிக்கும் பம்பர் சலுகைகள்: ஷாப்பிங் செய்யும்போது ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்தலாம்

SBI தனது வாடிக்கையாளர்களுக்காக மீண்டும் ஒரு சிறப்பு சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகையில், நீங்கள் ஷாப்பிங் செய்யலாம், அதன் மூலம் ஆயிரக்கணக்கில் பணத்தை மிச்சப்படுத்தலாம். 

மருத்துவம் மற்றும் உடல்நலம் தொடர்பான, wellness-ன் பல பிராண்டுகளின் SBI சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. சலுகையைப் பயன்படுத்த, நீங்கள் SBI YONO செயலியின் மூலம் பணம் செலுத்த வேண்டும். அதோடு விளம்பர குறியீட்டையும் (Promo Code) குறிப்பிட வேண்டும். 

1 /5

புகழ்பெற்ற ஆடைகள் பிராண்டான Flying Machine-லிருந்து ஷாப்பிங் செய்ய நீங்கள் திட்டமிட்டால், YONO செயலியை பயன்படுத்தி பணம் செலுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம், குறைந்தபட்சம் 1600 ரூபாய்க்கு ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு அதில் 1000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.

2 /5

கிஃப்ட் ரீடெய்லர் நிறுவனமான fernsnpetals-ல் YONO செயலி மூலம் ஷாப்பிங் செய்தால், SBI அதிக அளவில் தள்ளுபடியை அளிக்கிறது. குறைந்தபட்சம் 500 ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வாங்கினால், உங்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும். இதற்கு நீங்கள் RUPAY15 என்ற விளம்பர குறியீட்டையும் (Promo Code) உள்ளிட வேண்டும்.

3 /5

ஆன்லைன் டாக்டர் ஆலோசனை செயலியான DocsApp-பில் மூலம் மருத்துவரின் அபாயிண்ட்மெண்ட் புக் செய்ய YONO செயலி மூலம் பணம் செலுத்தினால், 125 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதற்கு நீங்கள் RUPAY என்ற விளம்பர குறியீட்டைப் (Promo Code) பயன்படுத்த வேண்டும்.

4 /5

ஹெல்த்கேர் நிறுவனமான ஹெல்த்கார்ட்டில் செய்யும் ஷாப்பிங்கிற்கு YONO செயலி மூலம் பணம் செலுத்தினால் கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. இதற்கு நீங்கள் RUPAYHK என்ற விளம்பர குறியீட்டை (Promo Code) உள்ளிட வேண்டும்.

5 /5

SBI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த சிறப்பு சலுகைகள் பற்றிய தகவலை அளித்துள்ளது. மேலும் அதிக தகவல்களுக்கு rupay.co.in –ஐப் பார்வையிடவும்.