Post Office Investment Schemes: அஞ்சல் அலுவலகத்தில் புதியதாக கணக்கை தொடங்குபவர்கள் இந்த ஐந்து வகையான முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து சிறந்த பலனை பெறலாம்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு: இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு 4.00 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்யவேண்டும்.
தேசிய சேமிப்பு தொடர் வாய்ப்பு கணக்கு: இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு 5.8 % வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.100 டெபாசிட் செய்யவேண்டும்.
தேசிய சேமிப்பு நேர வாய்ப்பு கணக்கு: இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு 6.60 % முதல் 7.00 % வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.1000 டெபாசிட் செய்யவேண்டும்.
தேசிய சேமிப்பு மாத வருமான கணக்கு: இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு 7.10 % வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் தனிநபர் ரூ.4.5 லட்சம் மற்றும் கூட்டுக்கணக்கில் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்யவேண்டும்.
தேசிய சேமிப்பு சான்றிதழ்: இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு ஆண்டுக்கு 7.00 % வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சமாக ரூ.1000 டெபாசிட் செய்யவேண்டும்.