இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் நிலையில், அதில் இருக்கும் முன்னணி வீரர்களின் பட்டியலை பார்க்கலாம்.
Private Jet Owners in Indian Cricket: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி மில்லியனர்களாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் பலர் பிரைவேட் ஜெட் வைத்திருக்கும் நிலையில், அவர்கள் எல்லாம் யார் என்ற பட்டியலை பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு மேட்ச் விளையாட இடம்பிடித்தாலே அவர்கள் சீக்கிரம் கோடீஸ்வரர்களாக மாறிவிடுவார்கள். பல ஆண்டு காலம் விளையாடுபவர்கள் நிச்சயம் மல்டி மில்லியனர்களாக தான் இருப்பார்கள். அந்தவகையில் இந்திய அணி வீரர்கள் யாரெல்லாம் பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.
கபில் தேவ் - இந்திய அணி முதன் முதலாக ஒருநாள் உலகக்கோப்பையை 1983 ஆம் ஆண்டு வெல்லும்போது கேப்டனாக இருந்தவர். தனி ஒருவராக அந்த தொடரில் பல போட்டிகளை வென்று கொடுத்த கபில்தேவ் தனக்கென ஒரு சொகுசு பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார். அவசர காலங்கள், போக்குவரத்து நெரிசல் இருக்கும் நேரங்களில் அதனை பயன்படுத்துகிறார்.
சச்சின் டெண்டுல்கர் - இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்பதை யாருக்கும் சொல்லி தெரியவேண்டியதில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பல தகர்க்க முடியாத சாதனைகளை செய்து வைத்திருக்கும் மாஸ்டர் பிளாஸ்டர், சொகுசு கார்கள், பைக்குகள் என பல வைத்திருக்கிறார். அந்த வரிசையில் பிரைவேட் ஜெட்டும்
எம்எஸ் தோனி - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் ஒருநாள், டி20 உலகக்கோப்பைகள், சாம்பியன்ஸ் டிராபி என மூன்றையும் குறுகிய காலத்தில் எம்எஸ் தோனி தலைமையில் தான் இந்திய அணி வென்றது. இதனால் இந்திய அணியின் ஆல்டைம் பேவரைட் கேப்டன், ஜாம்பவான் என பெயர் பெற்றிருக்கும் தோனி, பைக், கார் கலெக்ஷன்களுக்கே பல ஏக்கரில் ஷெட் அமைத்து அதில் பராமரித்து வருகிறார். கூடவே தனக்கென ஒரு பிரைவேட் ஜெட் ஒன்றையும் வைத்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா - இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இவரும் பல பிராண்டுகளின் முகமாக இருப்பதால் கிரிக்கெட் மில்லியனர்களில் இவரும் ஒருவர். அந்தவகையில் பாண்டியாவும் தனக்கென ஒரு பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார்.
விராட் கோலி - இப்போதைய கிரிக்கெட் உலகில் அதிக மார்க்கெட் பிராண்டு வைத்திருக்கும் ஒரே பிளேயர் விராட் கோலி மட்டுமே. சச்சினுக்கு அடுத்தபடியாக பல சர்வதேச சாதனைகளை வைத்திருக்கும் இவர், சொகுசு மற்றும் ஆடம்பரத்தை விரும்பக்கூடியவர். அதேநேரத்தில் பிரைவசி வேண்டும் என நினைப்பவர் என்பதால் தானும் மனைவி அனுஷ்கா சர்மாவும் பயணிப்பதற்கு என்றே ஒரு பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார்.
இவர்கள் மட்டுமல்ல, இன்னும் பல மில்லியனர் கிரிக்கெட்கள் தங்களுக்கென பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் அடிக்கடி பயணிப்பதற்கும், சொகுசு வாழ்க்கைக்காகவும் அதனை பயன்படுத்துகின்றனர்.