பஞ்சாபின் 15வது முதல்வர் அமரீந்தர் சிங்: பாட்டியாலா ‘மகாராஜா’ முதல் இந்திய ராணுவ வீர வரை..!!

அமரீந்தர் சிங் சனிக்கிழமை (செப்டம்பர் 18, 2021) பஞ்சாப் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார். தான் அவமானப்பட்டதாக உணர்ந்ததாகக் அவர் கூறினார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து காரணமாக ஏற்பட்ட மனக்கசப்பிற்கு பிறகு,  அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்தார்.

 

1 /8

79 வயதான அமரீந்தர் சிங், காங்கிரஸின் சக்திவாய்ந்த பிராந்திய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி  பெற முழு காரணமாக இருந்தவர். 117 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் இரண்டாவது முறையாக முதல்வர் பதவியை வகிக்க காங்கிரஸின் மகத்தான வெற்றிக்கு காரணமாக இருந்தவர்.

2 /8

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக அறியப்பட்ட சிங், 1980  ஆம் ஆண்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இருப்பினும், 1984 ஆம் ஆண்டு ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் போது இந்திய இராணுவம், அமிர்தரஸ் தங்க கோவிலில் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தும்  மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். 1985 ஆண்டு அகாலி தளத்தில் சேர்ந்தார் மற்றும் 1995 தேர்தலில் அகாலி தளம் (லாங்கோவால்) தொகுதியில் இருந்து பஞ்சாப் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பஞ்சாப் முதல்வராக 2002 முதல் 2007 வரை இருந்தார்.

3 /8

அமரீந்தர் சிங் தனது ஆரம்ப பள்ளிப் படிப்பை லாரான்ஸ் பள்ளி, சனவார் மற்றும் டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் பயின்றார்.

4 /8

1959 ஆம் ஆண்டு, அம்ரிந்தர் சிங், கரக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் சேர்ந்தார். 1963 ஆம் ஆண்டு அங்கிருந்து பட்டம் பெற்றார். அவர் 1963 இல் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார். 2 வது பிஎன் சீக்கிய ரெஜிமென்ட்டில் நியமிக்கப்பட்டார். அவரது தந்தை மற்றும் தாத்தா இருவரும் ராணுவத்தில் இதே பிரிவில்சேவை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 /8

அமரீந்தர் சிங், 1965 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற மிகச் சில அரசியல்வாதிகளில் ஒருவர்.

6 /8

பஞ்சாபின் 15 வது முதல்வரான அம்ரிந்தர் சிங், பாட்டியாலாவின் மறைந்த மகாராஜா யாதவீந்திர சிங்கின் மகன் ஆவார். சிங், இந்த ஆண்டின் தொடக்கத்தில், தனது தந்தை, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு உதவி செய்ததாகவும், சுதேச மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்காக சர்தார் படேலுடன் நெருக்கமாக பணியாற்றியதாகவும் கூறினார்.

7 /8

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சிங் தனது தந்தை இராணுவத்தில் பணியாற்றினார் என்றும், தேச உணர்வை முதலில் அவருக்குள் விதைத்தார் என்றும் கூறினார். "அவர் காட்டிய பாதையில் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்," என்று அவர் கூறினார்.  

8 /8

சிங் ஒரு நல்ல சமையல்காரராகவும் அறியப்படுகிறார். சமீபத்தில் இந்திய ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு விருந்து அளித்தார். சிங் தனது விருந்தினர்களுக்கு தனிப்பட்ட முறையில், தானே சிறந்த வகையில்  உணவுகளை சமைத்தார். 1965 இந்திய-பாகிஸ்தான் போரின் நினைவுகள் உட்பட பல புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.