ராகு பெயர்ச்சி ‘சில’ ராசிகளை படாய் படுத்தும்! எச்சரிக்கும் ஜோதிடர்கள்!

ராகு பெயர்ச்சி பலன் 2023: ஜோதிடத்தில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு, 2023 அக்டோபர் 30-ம் தேதி ராசி மாறுகிறார். ராகு மீனத்தில்  சஞ்சாரம் செய்வது சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும். 

1 /4

மேஷம்: மீனத்தில் ராகு சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்கள்  பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். முதலீடு செய்வதற்கு நேரம் சாதகமாக இல்லை. தேவையற்ற செலவுகள் கூடும். நிதி, உடல் மற்றும் மன பிரச்சனைகளுடன் குடும்ப பிரச்சனைகளும் அதிகரிக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

2 /4

ரிஷபம்: மன உளைச்சலை சந்திக்க நேரிடும். பொருளாதார நிலை பலவீனமாக இருக்கலாம். நீங்கள் எடுக்கும் வேலை திட்டமிட்டபடி சரியாக நிறைவேறாமல் போக வாய்ப்பு உண்டு.

3 /4

கன்னி: ராகுவின் பிற்போக்கு சஞ்சாரத்தால் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். சிறிய பணிகளுக்கு அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். உடல்நிலை மோசமாக இருக்கலாம். அதனால்தான் எச்சரிக்கையாக இருங்கள். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும்.

4 /4

மகரம்: தேவையற்ற செலவுகள் கூடும். இதற்காக எச்சரிக்கையாக இருங்கள். தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் வரலாம். திருமண வாழ்வில் சிரமங்கள் ஏற்படும். உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் தீங்கு ஏற்படலாம். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)