சந்திர கிரகணம் 2022: சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணத்திற்கு சரியாக 15 நாட்களுக்குப் பிறகு நவம்பர் 8 ஆம் தேதி ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நகழ உள்ளது. பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை கிரகணம் நடைபெறுகிறது.
ஐப்பசி மாத அமாவாசை அன்று சூரிய கிரகணமும், ஐப்பசி மாத பௌர்ணமி அன்று சந்திர கிரகணமும் நகழ்கிறது. 15 நாட்களில் அடுத்தடுத்து இரண்டு கிரகணம் வருவது என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பூமியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும், இயற்கை பேரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தை உண்டு பண்ணும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், இந்த சந்திர கிரகணம் அனைத்து ராசிக்காரர்களையும் எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்: இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமானதாக இல்லை. உடல் நலப் பிரச்சினைகள் இருக்கலாம். சில சிரமங்களை சந்திக்க நேரிடும். குழப்பமும் ஏற்படலாம். எனவே, ஒரு முடிவை எடுப்பதற்கு முன், நன்கு அலோசித்து எடுக்கவும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பணத்தை இழக்கலாம். எனவே எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது
கடகம்: கடக ராசியின் கடைசி சந்திர கிரகணம் பிரச்சனைகளை கொடுக்கும். தொழிலில் பிரச்சனைகள் வரலாம். உடல்நலப் பிரச்சினைகள் இருக்கலாம். பணம் தொடர்பான விஷயங்களில் விரும்பிய பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. நெருங்கிய உறவில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். மூத்த சகோதர சகோதரிகளுடன் சுமுகமான உறவைப் பேண முயற்சி செய்யுங்கள்.
துலாம்: சந்திர கிரகணத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு பண இழப்பு ஏற்படும். புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள். இல்லையெனில், நஷ்டம் ஏற்படலாம். பண தட்டுபாடு ஏற்படலாம். வாழ்க்கையில் சிறிது குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சில தடைகள் ஏற்படலாம். உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். மன உளைச்சல் ஏற்படும். காதல் உறவுகளிலும் சவால்கள் இருக்கலாம்.
மீனம்: சந்திர கிரகணம் மீன ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். பண இழப்பு ஏற்படலாம். புத்திசாலித்தனமாக செலவு செய்யுங்கள். உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள், சிகிச்சையில் எந்த வித அலட்சியத்தையும் காட்டாதீர்கள். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)