ஏப்ரல் முதல் இந்தப் பொருட்களின் விலை மாறுகிறது! எதன் விலை அதிகரிக்கும்? எது குறையும்?

New Rates From 2023 April 1: ஏப்ரல் மாதத்தில் சில பொருட்கள் விலை உயர்ந்ததாக இருக்கும், சில பொருட்கள் மலிவாக இருக்கும்... உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

வைட்டமின்கள், நகைகள், பிளாஸ்டிக் பொருட்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், உயர் பளபளப்பான காகிதம், தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றின் விலை ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிகரிக்கும்

1 /6

புதிய நிதியாண்டு! இந்த பொருட்களின் விலையும் புதிது என்பதில், முதலிடத்தில் வருவது சிகரெட். சிகரெட் விலை இந்த ஆண்டும் உயர்த்தப்படுகிறது 

2 /6

நடப்பு பட்ஜெட்டில், சமையலறை புகைபோக்கிகளுக்கான சுங்க வரி 7.5 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார். இதன் விளைவாக, சமையலறை புகைபோக்கி விலை உயர்கிறது

3 /6

இறக்குமதி செய்யப்படும் வெள்ளி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். அதோடு, உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்தியதால், வெள்ளி நகைகள், பிளாஸ்டிக் பொருட்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்களளின் விலையும் உயரும்

4 /6

மொபைல் போன்கள் விலை குறையும். கேமரா லென்ஸ்கள், செயற்கை வைரங்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள், சைக்கிள்கள், எல்இடி டிவிகள், பொம்மைகள், எலக்ட்ரிக் கார்கள் போன்றவற்றின் விலை குறையும்

5 /6

பதப்படுத்தப்பட்ட உணவுகளின் விலை அதிகரிக்கும் 

6 /6

வைரத்தின் விலை அதிகரிப்பு

You May Like

Sponsored by Taboola