மெசேஜ் செய்தே காதலை வளர்ப்பது எப்படி...? பசங்களா நோட் பண்ணுங்க!

Relationship Tips: நீங்கள் விரும்பும் பெண்ணிடம் காதலை சொல்லாமலேயே, மெசேஜில் டெக்ஸ்டிங் (Texting) செய்தே உங்களின் காதலை வளர்ப்பது குறித்த சில டிப்ஸ்களை இங்கு காணலாம்.

  • Aug 15, 2024, 16:06 PM IST

டெக்ஸ்டிங் (Texting) என்பது இந்த காலகட்டத்தில் காதலர்கள் இடையே பெரும் தாக்கத்தை செலுத்துகிறது. முந்தைய தலைமுறையிலேயே இது ஆரம்பித்துவிட்டது என்றாலும் டெக்ஸ்டிங் தற்போது ஸ்னாப்சேட், இன்ஸ்டா காலகட்டத்தில் பல பரிமாணங்களை பெற்றுவிட்டது எனலாம். 

 

1 /8

சொல்லாமலே லிவிங்ஸ்டன்கள், இதயம் முரளிகள் இந்த காலகட்டத்திலும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்த காலத்தில், லிவிங்ஸ்டன்களுக்கும், முரளிகளுக்கும் மொபைல் என்பதில்லை. ஆனால் இந்த கால லிவங்ஸ்டன்களுக்கும், முரளிகளுக்கும் மொபைல் மட்டுமின்றி அந்த பெண்ணின் மொபைல் எண்ணும் கூட இருக்கும்.   

2 /8

மொபைல் எண் இருந்தும் சில பேர் தங்களுக்கு பிடித்த பெண்களிடம் நேரில் பேசவும், மொபைலில் சேட் செய்யவும் தயங்குகிறார்கள் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள். ஆனாலும் நம்பிதான் ஆக வேண்டும்.   

3 /8

அப்படியிருக்க உங்களுக்கு பிடித்த பெண்களிடமோ, ஆண்களிடமோ உங்களின் காதலை வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு மொபைலில் டெக்ஸ்டிங்கே (Texting) போதுமானது. அந்த வகையில், டெக்ஸ்டிங்கிலேயே இந்த 5 விஷயங்களை கடைபிடித்தால் நிச்சயம் நீங்கள் நினைத்தது நிறைவேறும் எனலாம். அதற்கு அடிப்படையான விஷயம், உங்களுக்கு பிடித்தவர்களிடம் தயங்காமல் முதலில் டெக்ஸ்ட் செய்யுங்கள்.   

4 /8

ஆரம்ப கட்டத்தில் அவர்களின் கனவு, லட்சியம், அவர்களின் நீண்டகால ஆசைகள், நோக்கம் ஆகியவை குறித்து கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதாவது அவர்களது எதிர்கால திட்டங்களை அறிந்துகொள்வதன் மூலம் அவர்களிடம் நீங்கள் நிச்சயம் நெருக்கமானவராக மாறுவீர்கள்.   

5 /8

ஃபிளர்ட் செய்யுங்கள். சின்ன சின்ன ஜோக்குகள் மூலம் அவர்களை சிரிக்கவைக்கவோ அல்லது வேட்கப்படவோ முயலுங்கள். ஆனால் எந்த கட்டத்திலும் அவர்களை அசௌகரியமான நிலைக்கு தள்ளிவிடாதீர்கள். அடிக்கடி பிளர்ட் செய்துகொள்வது என்பது இருவருக்குள்ளும் தனி நெருக்கத்தை உருவாக்கும்.   

6 /8

இந்த கட்டங்களை தாண்டிய பின்னர் நீங்கள் அவர்களுக்கு அருமையான ஒரு செல்லப்பெயரை வையுங்கள். எல்லை மீறி செல்லாமல் அது உங்களின் நெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். உங்களின் டெக்ஸ்டிங் உரையாடலில் அடிக்கடி அந்த வார்த்தையை பயன்படுத்துங்கள்.   

7 /8

புகைப்படங்களை அனுப்பவது இன்னும் உங்களின் நெருக்கத்தை அதிகமாக்கும். Snapchat பயன்படுத்துபவர்கள் என்றால் இருவரும் ஸ்னாப் ஸ்ட்ரீக் (Snap Streak) வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உங்களின் புகைப்படமாகதான் இருக்க வேண்டும் என்றில்லை நீங்கள் செல்லும் இடங்கள், சாப்பிடும் உணவுகள், உங்கள் வீட்டு குழந்தைகள், நாய்கள், பூனைகளின் புகைப்படங்களையும் அனுப்பலாம்.   

8 /8

சேட்டை செய்வதும் காதலில் முக்கியம். அதிலும் நீங்கள் காதலிப்பவரை கலாய்ப்பது என்பது உங்களின் நெருக்கத்தை அதிகமாக்கும். அவரது மனதை பாதிக்காத வகையில், அவரே ரசிக்கும் வகையில் அவர் கலாய்க்கலாம். இது இன்னும் உங்களை நெருக்கமானவர்களாக மாற்றும். இவைதான் அடிப்படையானவை. இவை அனைத்தையும் வெற்றிகரமாக நீங்கள் செய்துவிட்டால், அடுத்த கட்டமாக லவ்வை எப்போது சொல்லலாம் என்பதை தீர்மானித்துவிடலாம்.