பிரேக்-அப் ஆவதற்கான 7 அறிகுறிகள்! ‘இது’ இருந்தா கண்டிப்பா காதல் முறிவுதான்!

Signs Of A Love Break Up : காதல் பிரேக் அப் ஆவதற்கு பல காரணங்கள் இருக்கும். பெரும்பாலும் காதலர்களே இதற்கு காரணமாக அமைவார்கள். ஒரு காதல் முடிவுபெற உள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா? 

Signs Of A Love Break Up : காதல் அழிவதில்லை என்று கூறிய காலம் அனைத்தும் மலையேறி போய்விட்டது. ஒருவருக்கு, அவர்களின் வாழ்நாளில் 3க்கும் மேற்பட்ட காதல்கள் வருமாம். காதலில் இருக்கும் பலருக்கு, பிரேக்-அப் ஆவதற்கு முன்னரே, “ஒரு வேளை இந்த உறவு முடியப்போகிறதோ?” என்ற எண்ணம் வரும். காதல் பிரேக்-அப்பில் முடிய போவதை நாம் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம். அவை என்னென்ன தெரியுமா? 

1 /8

பிரேக்-அப் ஆவதற்கு சில காரணங்கள் இருக்கலாம். அதற்கு பல சமயங்களில் காதலர்களே காரணமாக இருக்கிறார்கள். பிரேக்-அப் ஆவதற்கு முன்னர் இந்த 7 அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க!

2 /8

நீங்கள் ஏதேனும் முக்கியமான விஷயம் பேசுகையில் உங்கள் காதலன் அல்லது காதலி போனை பார்த்துக்கொண்டும், வேறு எங்காவது கவனத்தை வைத்துக்கொண்டும் இருப்பார். 

3 /8

ஒரு காலத்தில், “உனக்காக மலையவே பெயர்த்து வந்து கொடுப்பேன்..” என கூறியவர் இன்று உங்களுக்காக ஒரு சின்ன துரும்பை கூட அசைக்க மாட்டார். அவர், உங்களை கவர்வதற்காக செய்து கொண்டிருந்த முயற்சிகள் குறைந்து போயிருக்கும்.

4 /8

நாம் காதலிக்கும் நபர்கள் நமக்கு ஸ்பெஷலான கவனத்தை கொடுப்பர். ஆனால், உங்கள் காதல் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது என்றால் அந்த நபர் உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார். 

5 /8

உங்களுக்கும் உங்கள் பார்ட்னருக்கும் எப்போதும் சண்டை வந்து கொண்டே இருக்கும். நீங்கள் சகஜமாக பேச ஆரம்பிப்பவை கூட சண்டையில் சென்று முடிந்து விடும். 

6 /8

நீங்கள் காதலிக்கும் நபர், அவர் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக அந்த தவறுக்கு காரணம் இதுதான், அதுதான் என ஏதேனும் சாக்கு போக்கு கூறுவார். சமயத்தில் அவர் தவறு செய்ததற்கு நீங்கள்தான் காரணம் என பழியை உங்கள் தலையிலேயே தூக்கிப்போடுவார். 

7 /8

உங்களுக்குள் முன்பு இருந்தது போன்ற நெருக்கம் இப்போது இல்லாமல் இருக்கும். இருவரும் அருகில் கூட அமர மாட்டீர்கள். மனதளவிலும் உடல் அளவிலும் தூரமாக இருப்பீர்கள். 

8 /8

சண்டையில் இருவரில் யாரேனும் ஒருவர் பிரிந்து விடலாம் என்பது போன்ற வார்த்தைகளை கூறுவீர்கள். இது, உங்கள் உறவு விரைவில் முடிய போகிறது என்பதற்கான கடைசி அறிகுறியாகும்.