உங்கள் காதலன்/காதலியுடன் Live-in Relationship-ல் இருக்க விருப்பமா? இந்த விஷயங்களில் கவனம் தேவை!

உங்கள் காதலன் அல்லது காதலியுடன் Live-in Relationshipல் இருக்கலாம் என்று நீங்கள் முடிவு செய்வது சுலபமானது என்றாலும், அதற்கு பின்னால் இருக்கும் பிரச்சனைகளையும் சிந்தித்து பார்க்க வேண்டும். 

 

1 /6

Live-in Relationshipல் இருப்பதன் மூலம் வாடகை பணத்தையும், சாப்பாட்டிற்கான பணத்தை மிச்சம் செய்யலாம் என்று எண்ணி செல்ல வேண்டாம். ஆனால் யாருடன் இருக்க போகிறீர்கள் என்பதில் கவனம் தேவை.  

2 /6

தினசரி அலுவலக வேலைகள், வீட்டு வேலைகள் மற்றும் செலவுகளை பிரித்து திட்டமிடுவது அவசியம். இவற்றில் இருந்து தான் சண்டைகள் உருவாகும்.   

3 /6

யார் சமைப்பது? யார் துணி துவைப்பது? யார் வாடகை கொடுப்பது? யார் வீட்டு செலவுகளை பார்ப்பது என்று ஒன்றன் பின் ஒன்றாக சண்டை வரலாம்.   

4 /6

Live-in Relationshipல் செல்வதற்கு முன்பு அவர்களுடைய வேலை, உணவு விருப்பங்கள், உடற்பயிற்சிகள், தூங்கும் நேரம், பொழுதுபோக்குகள், தனியுரிமை பற்றிய விசயங்களை நன்கு புரிந்து வைத்து இருக்க வேண்டும்.  

5 /6

Live-in Relationshipல் சென்றால் உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மாற்றி கொள்ள நேரிடும். அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.   

6 /6

இந்த உறவு குறுகிய காலத்திற்கு மட்டுமா? அல்லது நீண்ட காலம் தொடர போகிறீர்களா என்பதில் இருவரும் பேசி முடிவு எடுக்க வேண்டியது அவசியம். இருவரின் இலக்குகள், வேலைகள், குடும்பங்களை பற்றி புரிந்து தெரிந்து கொள்ளுங்கள்.