ரஷ்யா -உக்ரைன் போரில் நூற்றுக்கணக்கான் உயிர்களை காப்பாற்றிய மோப்ப நாயின் திறனை பாராட்டி, உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியால் புரவலர் பதக்கத்தை வழங்கியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் உக்ரைன் பயணத்தின் போது அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சமீபத்தில்போரி வீரர்களுக்கான பதக்கங்களை வழங்கினார். (புகைப்படம் – ராய்ட்டர்ஸ்)
200க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்த மோப்ப நாய் ஜாக் ரஸ்ஸல் டெரியர் இனத்தைச் சேர்ந்தது. பெப்ரவரி 24 இல் தொடங்கிய போருக்குப் பின்னர் பல தாக்குதல்களைத் தடுத்த பெருமை இதற்கு உண்டு. (புகைப்படம் – Wiki Commons)
யுத்த வீரன் என பாராட்டி பதக்கம் வழங்கும் போது குரைத்து வாலை ஆட்டியதன் மூலம் அனைவரின் மனதையும் வென்றது அந்த மோப்ப நாய். கனடா பிரதமர் ட்ரூடோவும் நாயை பாராட்டினார். (புகைப்படம் – Wiki Commons)
உக்ரேனிய அதிபர், உக்ரேனிய ஹீரோக்களுக்கு நான் வெகுமதி அளிக்க விரும்புகிறேன். கண்ணிவெடிகளின் ஆபத்து உள்ள பகுதிகளில் மோப்பம் பிடித்த, குண்டுகளை கண்டறிந்து, நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளது என பாராட்டினார். (புகைப்படம் – Wiki Commons)
மோப்ப நாயின் வீடியோவும் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. வீடியோவில், அவர் ஒரு வேனில் குதித்து இராணுவ அதிகாரி ஒருவரின் மடியில் அமர்ந்து, அந்த பகுதி பாதுகாப்பாகவும் கண்ணிவெடி குண்டுகள் இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்ய குப்பைகளில் மோப்பம் பிடிக்கும் காட்சி உள்ளது. (புகைப்படம் – Wiki Commons)