பட்ஜெட் விலையில் Samsung Galaxy A12; நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இதோ..

சாம்சங் கேலக்ஸி A சீரிஸில் கடந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது, மேலும் இந்த ஆண்டும் இந்த வரிசையில் பல சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • Jan 12, 2021, 14:02 PM IST

சாம்சங் கேலக்ஸி A சீரிஸில் கடந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானது, மேலும் இந்த ஆண்டும் இந்த வரிசையில் பல சாதனங்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

1 /5

நிறுவனம் கடந்த 2020 நவம்பரில் கேலக்ஸி A12 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்த கைபேசியை பிராண்ட் அறிவித்தாலும், விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை வெளியிடப்படாமல் இருந்தது. சமீபத்திய வளர்ச்சியாக, சாதனத்திற்கான விலை வெவ்வேறு சந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் விற்பனை விவரங்களை நிறுவனம் அறிவிக்கக்கூடும் என்றும் இது அறிவுறுத்துகிறது.

2 /5

சாம்சங் கேலக்ஸி A12 இன் விலைகள் சிங்கப்பூர், UK மற்றும் மலேசியா பிராந்தியங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்த கைபேசி $229 விலையில் விற்கப்படும், இது சிங்கப்பூரில் சுமார் ரூ.12,600 ஆகும். இது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்கான விலையாகும். இந்த சாதனம் ஜனவரி 9 முதல் காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் ப்ளூ நிழல்களில் விற்பனைக்கு கிடைக்கும்.  

3 /5

மலேசிய சந்தையில் இந்த சாதனம் RM799 விலையில் சில்லறை விற்பனை செய்யப்படும், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.14,400 ஆகும். இங்குள்ள வேரியண்ட்டில் அதிக 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் விலை £170, இது இந்தியாவில் சுமார் ரூ.16,900 ஆகும். இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விருப்பங்களின் விலை ஆகும்.

4 /5

சாம்சங் கேலக்ஸி A12 மீடியா டெக் ஹீலியோ P35 செயலியைக் கொண்டுள்ளது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 os உடன் வழங்கப்படும் மற்றும் மேலே தனிப்பயன் ஒன் UI ஸ்கின் இருக்கும். சாதனம் 6.5 அங்குல LCD டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. பின்புறத்தில் குவாட்-லென்ஸ் அமைப்பு 48MP முதன்மை சென்சார், 5MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் ஒரு ஜோடி 2MP சென்சார் கொண்டுள்ளது.

5 /5

சாம்சங் கேலக்ஸி A12 6.5 அங்குல LCD பேனலைக் கொண்டுள்ளது, இது இன்ஃபினிட்டி-V நாட்ச் நிலையைக் கொண்டுள்ளது. மீடியாடெக் வழங்கும் ஹீலியோ P35 சிப்செட் மூலம் சாதனம் ஆற்றல் பெறுகிறது, மேலும் இது 5,000 mAh பேட்டரி உடன் ஆதரிக்கப்படுகிறது. கைபேசி 15W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. சாதனத்தின் வலது விளிம்பில் கைரேகை ஸ்கேனர் கிடைக்கிறது. செல்ஃபிக்களுக்கு, 8MP சென்சார் உள்ளது.