'அன்புள்ள வாடிக்கையாளரே...' எஸ்எம்எஸ் மூலம் மோசடி - ரொம்ப கவனமா இருங்க!

SBI Fake SMS Scam: உங்களின் YONO கணக்கு தடுக்கப்பட்டதாகக் கூறி, வங்கி அதிகாரிகளிடம் இருந்து வந்ததாகக் கூறப்படும் தொலைபேசி மெசேஜ்கள் குறித்து, பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளர்களுக்கு, அரசின் பொது தகவல் பணியகம் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

  • Feb 25, 2023, 20:19 PM IST
 
 
 
 
 
 
 
1 /5

வாடிக்கையாளர் வரும் மெசஜேகளில்,"அன்புள்ள எஸ்பிஐ வாடிக்கையாளரே, உங்கள் YONO கணக்கு இன்று முடக்கப்படும். உங்கள் பான் கார்டு எண்ணைப் புதுப்பிக்க இணைப்பைக் கிளிக் செய்யவும்" குறிப்பிட்டிருக்கும். 

2 /5

புகராளிக்க: மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் உங்கள் வங்கி கணக்கு குறித்த தகவலை ஒருபோதும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படித் தோன்றும் தகவல் ஏதேனும் கிடைத்தால், உடனடியாக report.phishing@sbi.co.in க்கு புகாரளிக்கவும்.  

3 /5

வேண்டவே வேண்டாம்...: வங்கி கணக்கு எண்கள், கடவுச்சொற்கள் அல்லது மோசடியாகப் பயன்படுத்தக்கூடிய முக்கியமான தகவல்கள் போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் ஒருபோதும் குறுஞ்செய்தி மூலம் அனுப்ப வேண்டாம் என்று எஸ்பிஐ இணையதளம் அறிவுறுத்துகிறது.  

4 /5

உங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவோ, கணக்கைச் செயல்படுத்தவோ அல்லது உங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த போன் செய்தோ அல்லது ஆன்லைனில் தகவல்களை உள்ளீடு கொடுக்கும்படியோ கோரிக்கையுடன் குறுஞ்செய்தி வந்தால் மிகவும் கவனமாக இருக்கவும். உங்கள் தனிப்பட்ட வங்கி கணக்குத் தகவலைப் பெறுவதற்கும் மோசடி செய்வதற்கும் குற்றவாளிகள் இப்படிச்செய்யலாம் என வங்கி எச்சரித்துள்ளது.

5 /5

இதுபோன்ற இணைய மோசடி சம்பவங்கள் குறித்து report.phishing@sbi.co.in என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளலாம். சைபர் கிரைம் ஹாட்லைனை (800) 1930 என்ற நம்பருக்கு தொடர்புகொள்ளுமாறும் வங்கி அறிவுறுத்தியது. மேலும் விவரங்களுக்கு சைபர் கிரைம் அமைப்பின் இணையதளத்தைப் பார்வையிடவும்.