Shani Gochar: சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து விலகி கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகவிருக்கிறார். பொதுவாகவே, சனி தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெற பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
நீதியின் கடவுள் சனி பகவான், கர்மாவைக் கொடுப்பவராகவும் கெடுப்பவராகவும் இருப்பதால், ஒவ்வொரும் அவரவர் ஜாதகங்களில் சனியின் இருப்பைத் தெரிந்துக் கொண்டு பரிகாரங்கள் செய்ய வேண்டும்.
சனியின் ஏழரை மற்றும் சனி தசை தொடங்கினால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதிலும் ஒருவரின் ஜாதகத்தில் சனி அசுப நிலையில் இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ஒருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்பங்களை அனுபவிக்க வேண்டும், நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
சனி தோஷம் இருக்கும் போது, அதில்ருந்து விடுபட சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த பரிகாரங்கள் சனி பகவானை மகிழ்வித்து வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் போக்குகிறது. பணியில் இருந்த தடைகள் நீங்கும்.
தற்போது தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிகளுக்கு ஏழரை சனி துவங்கி உள்ளது. மிதுனம் மற்றும் துலாம் ராசிகளுக்கும் சனி மகாதசை தொடங்கும். எனவே இந்த 5 ராசிக்காரர்கள் சனிக்கிழமையன்று சில சிறப்பு பரிகாரங்களை செய்ய வேண்டும்.
சனி பகவானை மகிழ்விக்க சனிக்கிழமையன்று எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும். ஏழை மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுங்கள்.
ஏழரை சனி நடந்துக் கொண்டிருக்கும்போது யாரையும் அவமதிக்காதீர்கள். யாரையும் ஏமாற்றாதீர்கள். விலங்குகளை சித்திரவதை செய்யாதீர்கள். கடினமாக உழைப்பவர்களை அவமதிக்காதீர்கள், அவர்களை காயப்படுத்தாதீர்கள். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான புரிதல் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளது. ஜீ நியூஸ் இவற்றை பரிந்துரைக்கவில்லை.)