வர்த்தக வாரத்தின் முதல் நாளில் பங்குச் சந்தையில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 900 புள்ளிகளை இழந்தது. ஆனால் வலுவிழந்த பங்கு சந்தையிலும் பெரிய லாபம் ஈட்டலாம். உள்நாட்டு தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் 5 வலுவான பங்குகளை வாங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இதில் ஐசிஐசிஐ வங்கி, எம்&எம், ஹிண்டால்கோ, ஐடிசி மற்றும் பஜாஜ் ஃபின் பங்குகள் ஆகியவை அடங்கும். முதலீட்டாளர்கள் ஒரு வருட காலத்தில் சுமார் 30 சதவிகிதம் அதிக லாபம் ஈட்ட முடியும்.
ICICI வங்கி: இந்த நிறுவனத்தின் பங்கு 1150 ரூபாய் வரை உயரும் என கூறப்படுகிறது. இந்த பங்கு சற்று சரிவுடன் ரூ.897.25 என்ற விலையில் வர்த்தகமாகிறது.
M&M பங்கு விலை: இந்த பங்கு ரூ.1475 வரை அதிகரிக்க கூடும். பலவீனமான சந்தையில் கூட மும்பை பங்கு சந்தையில் இந்த பங்கு ரூ.1205க்கு வர்த்தகமாகிறது.
உள்நாட்டு தரகு நிறுவனமான MOFSL, பங்குக மதிப்பீட்டை வழங்கியுள்ளது. ஹிண்டால்கோ பங்கு விலை ரூ.510 வரை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இன்று இந்த பங்கு சுமார் 1 சதவீதம் பலத்துடன் ரூ.425.45க்கு வர்த்தகமாகிறது.
ITC பங்கு விலை: இன்ட்ராடேயில் பங்கு ரூ.400-ஐ தொட்டது. பங்கு மேலும் ஏற்றம் காட்ட முடியும். பங்கு மதிப்பு ரூ.450 ஐ தொடும் என கூறப்படுகிறது.
பஜாஜ் ஃபைனான்ஸ்: மும்பை பங்குசந்தையில் இந்த பங்கு ரூ.5921-க்கு வர்த்தகமாகிறது. வரும் நாட்களில் பங்கு 6,700 அளவைத் தொடும் என கூறப்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள பங்கு முதலீட்டு ஆலோசனைகள் தரகு நிறுவனங்கள்/நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. இவை Zee News கருத்துக்கள் அல்ல. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரை அணுகவும்.