மாலை நேரத்தில் சமோசா சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா?

மாலை நேர சிற்றுண்டியாக பலரும் விரும்பி சாப்பிடும் சமோசா சாப்பிடுவதற்கு ருசியானதாக இருந்தாலும், அதில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளது. 

 

1 /5

மாலை நேர சிற்றுண்டியாக பலரும் விரும்பி சாப்பிடும் சமோசா சாப்பிடுவதற்கு ருசியானதாக இருந்தாலும், அதில் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்கள் நிறைய உள்ளது.   

2 /5

சமோசாவில் உள்ள அதிகப்படியான எண்ணெய், புற்றுநோயை உருவாக்கக்கூடிய டிரான்ஸ் கொழுப்புகளை அதிகமாக கொண்டிருப்பதால் உங்கள் உடலுக்கு பல்வேறு ஆபத்துகள் ஏற்படும்.  

3 /5

சமோசா செய்ய பயன்படுத்தப்படும் மைதா மாவில் அதிகளவு கார்போஹைட்ரேட் நிரம்பியுள்ளது, இதோடு இதில் சேர்க்கப்படும் உருளைக்கிழங்கில் காபோஹைட்ரேட் உள்ளது.  இந்த கலவையை சாப்பிடுவதால் உடலில் அதிகளவு கார்போஹைட்ரேட் சேர்ந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.  

4 /5

சமோசாவிற்கு சேர்க்கப்படும் மாவில் அதிகளவில் உப்பு உள்ளது, இதனை நீங்கள் சாப்பிடும்போது உங்கள் வயிற்றில் அதிகப்படியான உப்பு நிரம்புகிறது.  இதனால் மோசமான தூக்கம், கண்களில் பாதிப்பு ஏற்படலாம்.  

5 /5

தினமும் சமோசா சாப்பிடுவதன் மூலம் நீரிழிவு பிரச்சனை, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் பிரச்னைகள் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சமோசாவில் அதிகளவு கலோரி உள்ளதால் இது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.  சமோசாவிலுள்ள அதிகப்படியான எண்ணெய் கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.