கலைஞர் 100: வருகை தராத முக்கிய நட்சத்திரங்கள் யார் யார்?

Kalaignar 100 Ceremony: 'கலைஞர் 100' என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டாலும், முக்கிய நட்சத்திரங்கள் சிலர் பங்கேற்கவில்லை.

 

 

 

1 /7

சிம்பு: இவர் வெளிநாட்டில் இருக்கும் காரணத்தால் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. 

2 /7

விஷால்: நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் முக்கிய பொறுப்பு வகித்த இவரும் வெளிநாட்டில் இருப்பதால் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. 

3 /7

ராதிகா: தனது காலில் காயம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்நிகழ்வில் பங்கேற்க இயலவில்லை என நடிகை ராதிகா சரத்குமார் பதிவிட்டிருந்தார்.   

4 /7

திரிஷா: நடிகைகளில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரியங்கா மோகன், ரோஜா உள்ளிட்ட வருகை தந்துள்ள நிலையில், பலரும் வருகை தரவில்லை எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் திரிஷா விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் வரவில்லை என கூறப்படுகிறது.   

5 /7

அஜித்: இவரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தெரிகிறது.   

6 /7

விஜய்: நடிகர் விஜய்க்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.   

7 /7

ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நட்சத்திரங்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.