ரத்த சுத்திகரிப்புக்கு உதவும் முட்டைகோஸ்! அருமைபெருமை தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Nutrients of Cabbage: நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்துள்ள முட்டைக்கோள் மலச்சிக்கலை குணப்படுத்தி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த காய் உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக கருதப்படுகின்றது. 

நாம் உண்ணும் உணவுகளிலேயே சத்துக்கள் நிரம்பியிருக்கிறது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நாம் உண்ணும் உணவுகளே காரணம். யாருக்கு எந்த உணவு ஒத்துக் கொள்ளும் என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் என்றாலும், பொதுவாக அனைவருக்கும் ஏற்ற உணவுகளில் முட்டைகோஸ் பட்டியலில் இடம் பித்ட்துவிடுகிறது.

1 /8

உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ள முட்டைகோஸ் உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் உடலில் ஏற்படும் பிரச்சனைகளான புற்றுநோய், இதய நோய் போன்றவை ஏற்படுவதை தடுக்கும்

2 /8

முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்: கார்போஹைட்ரேட், சர்கரை, டையட்டரி ஃபைபர், கொழுப்பு, புரதம், வைட்டமின் பி, வைட்டமின் பி 2, வைட்டமின் பி 3, வைட்டமின் பி 5, வைட்டமின் பி 6, வைட்டமின் பி 9, வைட்டமின் சி, வைட்டமின் கே, கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம் 12

3 /8

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது. மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

4 /8

முட்டைகோஸ், சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை பிரிப்பதில் உதவியாக இருக்கும் சத்துக்கள் அனைத்தும் முட்டைகோஸில் உள்ளன

5 /8

தொடர்ந்து காலை உணவு தவிர்ப்பது, அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது, உட்பட பல காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் கடுமையான வயிற்றுவலியை போக்க முட்டைகோஸ் ஜூஸ் உதவும்.

6 /8

கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும் காய்கறிகளில் உடல் எடையை குறைக்க முட்டைகோஸ் சிறந்த உணவாக அமைகிறது. இதனை உட்கொள்வதால், செரிமானம் சரியாகி, மலம் எளிதாக வெளியேறி, மலச்சிக்கல் சரியாகிறது. வைட்டமின் சி நிறைந்த இந்த காய், நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது

7 /8

முட்டைகோஸ் இரத்தத்தை சுத்தப்படுத்தும். தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். முடியின் வேர்களுக்கு பலம் கொடுக்கும்.

8 /8

முட்டைகோஸை சாலடாக சாப்பிடுவதே சிறந்தது. அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ள முட்டைகோஸ் சமைக்கப்படும்போது, குளுட்டமைல் வீரியம் குறைந்துவிடும் என்பதால், அதன் முழு பலனையும் பெற சாலடாக உண்ணவும்.