புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!

ஆனி மாத ராசி பலன்: சூரியன் மிதுனத்தில் சஞ்சரிக்கும் ஆனி மாதத்தில், சில ராசிக்காரர்களின் செல்வ வளம் பெருகும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பல நன்மைகள் கிடைக்கும். மிதுன ராசியில் மூன்று முக்கிய கிரகங்கள் இணைவதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் பலன்கள் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்...

ஜூன் மத்தியில் சூரியன் மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார், இதன் காரணமாக மிதுனத்தில் சூரியன், புதன் மற்றும் சுக்கிரனின்  சேர்க்கை உருவாகப் போகிறது. மிதுனத்தில் மூன்று கிரகங்கள் இணைவதால் 5 ராசிகளான துலாம் ராசிக்காரர்களுக்கு பலன் தரும். என்கின்றனர் ஜோதிடர்கள்.

1 /8

புத ஆதித்ய யோகம்: ஜூன் 14ல் சூரியன் மிதுன ராசிக்குள் நுழைகிறார். சூரியன் மிதுன ராசியில் பிரவேசிப்பதால்  திரிக்ராஹி யோகம், புதாதித்ய யோகம், சுக்ராதித்ய யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் உருவாகிறது. திருமணம், குழந்தைகள் ஆகியவற்றின் காரணி கிரகமாக இருக்கும் புதன் 14 ஆம் தேதி மிதுன ராசியில் பெயர்ச்சியாக உள்ளதால் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. 

2 /8

சுக்ர ஆதித்ய யோகம் : சுக்கிரன் ஜூன் 12 ஆம் தேதி மிதுனத்திற்கு செல்கிறார். தற்போது ரிஷப ராசியில் அமைந்துள்ள  சுக்கிரன் ஜூன் 12ல் புதனின் ராசியில் நுழைப் போகிறார்.  ஜூன் 14ல் சூரியன் மிதுன ராசிக்குள் நுழையும் நிலையில், சூரியமும் சுக்கிரனும் இணைந்து, சுக்ர ஆதித்ய யோகம் உருவாகிறது.

3 /8

மேஷ ராசி: சூரியனின் சஞ்சாரத்தால், மேஷ ராசிக்காரர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக பல நன்மைகளைப் பெறுவார்கள். வாழ்க்கையின் அனைத்து நிலைகளில் இருப்பவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும் பல செல்வாக்கு மிக்கவர்களைச் சந்திப்பீர்கள். அனைத்து விதமான பிரச்சனைகளும் தடைகளும் நீங்கி, கைக்கு வராமல் இருந்த் பணமும் திரும்பக் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள், புதிய வருமானம் கிடைக்கும். 

4 /8

சிம்ம ராசி: சூரியனின் சஞ்சாரத்தால் சிம்ம ராசிக்காரர்களின் நிறைவேறாத ஆசைகள் நிறைவேறி மதிப்பு மரியாதை கூடும். இந்த நேரத்தில், நீங்கள் சில புதிய திட்டங்களை பணிகளை தொடங்கலாம். அது நல்ல பலனைத் தரும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். கிரகங்களின் சுப தாக்கத்தால், பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பாராத பண லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி இருக்கும்.

5 /8

கன்னி ராசி: சூரியன் பெயர்ச்சி காரணமாக, ஆனி மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வலுவான அறிகுறிகளைப் பெறுகிறார்கள். இக்காலகட்டத்தில் உத்தியோகத்தில் இருப்பவர்களின் தொழில் வலுப்பெறுவதோடு, நல்ல வருமானமும் அதிகரிக்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகளைக் காண்பீர்கள், உங்கள் வங்கி இருப்பு கணிசமாக அதிகரிக்கும். புதிய சொத்து வாங்குவதில் வெற்றி பெறுவீர்கள். மன மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். உங்கள் கனவுகளை நனவாக்கும் வாய்ப்பும் கிடைக்கும். 

6 /8

துலாம் ராசி: சூரியனின் சஞ்சாரத்தால், துலாம் ராசிக்காரர்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும், நிறைவேறாத ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். சமூகத்தில் உங்களுக்கென்று தனி நிலையை அடைய முடியும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முழுமையாக ஆரோக்கியமாக இருப்பீர்கள். மேலும் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். கூடுதல் வருமான ஆதாரங்களையும் பெறுவீர்கள். இது உங்கள் நிதி நிலையை மேம்படுத்தும். 

7 /8

மகர ராசி: சூரியனின் சஞ்சாரத்தால், மகர ராசிக்காரர்கள் குடும்பம் மற்றும் நிதி ரீதியாக வாழ்வில் நிலவும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வருமான ஆதாரங்களை அதிகரிப்பதோடு, பொருளாதார நிலையை வலுப்படுத்தவும் முடியும். உங்கள் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றும் நோக்கில் செயல்படுவீர்கள். வேலை செய்பவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். மேலும் வெளிநாட்டு மூலங்களிலிருந்தும் லாபத்தைப் பெற முடியும். திருமண மற்றும் குடும்ப வாழ்க்கை சாதகமாக இருக்கும். மேலும் அனைவரையும் அழைத்துச் செல்வதில் வெற்றி பெறுவீர்கள்.

8 /8

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.