IPL Final: சன்ரைசர்ஸ் பேட்டிங்... வெற்றி வாய்ப்பு இந்த அணிக்கு அதிகம் - ஏன் தெரியுமா?

IPL Final 2024 KKR vs CSK: 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன்மூலம், வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் என்பதை இதில் விரிவாக காணலாம்.

  • May 26, 2024, 19:46 PM IST

இன்றைய போட்டியின் பிற்பகுதியில் பனியின் தாக்கம் இருக்குமா இருக்காதா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. அதுகுறித்து இதில் பார்க்கலாம். 

 

 

1 /8

இறுதிப்போட்டி: 17ஆவது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டியின் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.   

2 /8

பிளேயிங் லெவனில் மாற்றம்: டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இரு அணிகளும் பிளேயிங் லெவனில் பெரிதாக மாற்றம் செய்யவில்லை. இம்பாக்ட் வீரர்களில் வேண்டுமென்றால் மாற்றங்கள் வரலாம். ஹைதராபாத் அணியில் மட்டும் அப்துல் சமத்திற்கு பதில் ஷாபாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், அந்த அணிக்கு பந்துவீச்சின்போது கூடுதல் பந்துவீச்சாளர் கிடைக்கலாம்.   

3 /8

பின் பாட் கம்மின்ஸ் பேசியது: நாங்கள் முதலில் பேட்டிங் செய்கிறோம். இது ஒரு சிறப்பான ஆடுகளம் போல் தெரிகிறது. முந்தைய இரவு (குவாலிஃபயர் 2 போட்டி) வேறு ஆடுகளத்தில் விளையாடினோம். அன்றைய ஆட்டத்தில் பனி இல்லை. ஆனால் பனியின் தாக்கம் இருக்கும்போது, ஆட்டத்தில் அது மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அன்று பனியின் தாக்கம் இல்லாததால் இன்றும் பனியின் இருக்காது என்று நான் நினைக்கவில்லை. முதலில் நாங்கள் பேட்டிங்கில் அதிரடியை காட்ட விரும்புகிறோம். எங்களிடம் ஒரு ஸ்டைல் உள்ளது, அது எப்போதும் வேலை செய்யாது, ஆனால் அது வேலை செய்யும் போது, அது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். இதுவரை நாங்கள் ஸ்கோரை பாதுகாப்பதில் சிறப்பாக டிபெண்ட் செய்திருக்கிறோம்.  

4 /8

கேகேஆர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேசியது: (டாஸ் வென்றிருந்தால்) நாங்கள் பந்துவீசியிருப்போம், ஆடுகளம் எப்படி ஒத்துழைக்கிறது என்பது குறித்து எங்களுக்கு சரியான யோசனை கிடைக்கும். இது செம்மண் ஆடுகளம். இதேபோன்ற ஆடுகளத்தில்தான் நாங்கள் எங்கள் கடைசி ஆட்டத்தை (குவாலிஃபயர் 1) விளையாடினோம். நாங்கள் இன்றைய தினத்தில் கவனமாக இருக்க வேண்டும், அடிப்படைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். எங்கள் எல்லா திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு தனி நபரும் பொறுப்பேற்று விளையாடுவார்கள் என நினைக்கிறேன். இது மாபெரும் போட்டி, முதன்முறையாக இறுதிப் போட்டியில் விளையாடும் பல வீரர்கள் எங்கள் அணியிடம் உள்ளனர். அவர்கள் பதற்றமாக இருக்கின்றனர், ஆனால் இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு.  

5 /8

Dew இருக்காது: இன்றைய ஆட்டத்தில் பனியின் தாக்கம் இருக்காது என்பதே பலரின் கணிப்பாக உள்ளது. நேற்று சென்னையில் மழை பெய்ததால் இன்று பனிக்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், மைதானம் மிகவும் வெக்கையாக இருக்கும் என கூறப்படுகிறது.  

6 /8

சென்னை வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரின் X பதிவில்,"மாலை 6 மணியளவில் சென்னையில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருக்கும். காற்றில் ஈரப்பதம் 70% இருக்கும். போட்டி நேரத்தில் ஈரப்பதம் 80%-85% ஆக அதிகரிக்கும். இன்று ஐபிஎல் இறுதிப் போட்டியை காண செல்பவர்கள் நிறைய தண்ணீர் எடுத்துச் செல்லுங்கள் மற்றும் அடர்த்தியான ஆடைகளைத் தவிர்த்துவிடுங்கள். நிறைய வியர்க்கும்" என அறிவுறுத்தியிருந்தார்.  

7 /8

இதன்மூலம், இரண்டாவது இன்னிங்ஸின் போது பனியின் தாக்கம் அதிகம் இருக்காவிட்டால் சன்ரைசர்ஸ் அணிக்கு இது பெரிய சாதகமாக இருக்கும். அதற்கு சுமார் 210+ ரன்களுக்கு மேல் கொல்கத்தாவுக்கு இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த போட்டியை போல் 172 ரன்கள் இன்றைய ஆடுகளத்தில் போதவே போதாது.  

8 /8

கொல்கத்தா அணியும் அதிரடியாக விளையாடும் என்பதால் சமமான போட்டி நீடிக்கலாம். கொல்கத்தா அணி இந்த தொடரில் 4 முறை சேஸ் செய்து அனைத்திலும் வென்றிருப்பதால் இன்றைய போட்டியும் அவ்வாறே அமைய வேண்டும் என அவர்கள் யோசிப்பார்கள். 2012ஆம் ஆண்டு கொல்கத்தா அணி இதே சென்னை சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டியை விளையாடியபோது, சிஎஸ்கே அணி டாஸ் வென்று பேட்டிங்கையே தேர்வு செய்தது. அந்த போட்டியில் வெற்றிகரமாக சேஸ் செய்து கேகேஆர் முதல் முறையாக கோப்பையை வென்றது.