பட்ஜெட் விலையில் நல்ல மைலேஜ் கொடுக்கும் சூப்பரான 5 பைக்குகள்!

பட்ஜெட் விலையில் நல்ல மைலேஜ் கொடுக்கக்கூடிய டிவிஎஸ் ரைடர் முதல் பஜாஜ் பல்சர் வரையிலான 5 பைக்குகளை பார்க்கலாம். 

 

பட்ஜெட் விலையில் நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக்குகளை அதிகம் இளைஞர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்கு ஏற்றபடியான அம்சங்களும் இருக்க வேண்டும், அதேநேரத்தில் விலையும் தரமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில் இப்போது மார்க்கெட்டில் இருக்கும் நல்ல மைலேஜ் கொடுக்கும் பைக்குகளை பார்க்கலாம்.

 

1 /9

டிவிஎஸ் ரைடர் 125 டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் 125 பைக்கின் விற்பனை எண்ணிக்கை மாதந்தோறும் 40,000 எட்டும் நிலையில் தொடர்ந்து அமோக வரவேற்பினை 125சிசி சந்தையில்  பெற்றுள்ளது. 124.8cc என்ஜின் பெற்ற மாடலில் அதிகபட்சமாக 7,500RPM-ல் 11.2 bhp பவர், 6,000RPM-ல் 11.2 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 

2 /9

ஐந்து வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 52 முதல் 55 கிமீ வரை கிடைக்கின்றது. ஸ்பிளிட் சீட், சிங்கிள் சீட் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ளது. இந்த மாடலில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 2024 டிவிஎஸ் ரைடர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.19 லட்சம் முதல் ரூ.1.31 லட்சம் ஆகும்.

3 /9

ஹோண்டா SP125 -  இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகின்ற பிரசத்தி பெற்ற ஹோண்டாவின் SP125 மற்றும் ஷைன் 125 இரு மாடல்களும் 125சிசி சந்தையில் முதன்மையான இடத்தை பெற்று மாதந்தோறும் 1 லட்சத்துக்கும் அதிகமான டெலிவரி வழங்கப்படுகின்றது. இந்த மாடலின் பவர் மற்றவற்றை விட சற்று குறைவாக 10.8hp குதிரைத்திறன், 10.9Nm டார்க் வெளிப்படுத்தும் 123.94cc, ஏர்-கூல்டு என்ஜின் பெற்றுள்ளது. 

4 /9

இந்த மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 58 கிமீ வரை கிடைக்கின்றது. இந்த மாடலில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 2024 ஹோண்டா ஷைன் 125 மற்றும் SP125 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.04 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் ஆகும்.

5 /9

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125R - சமீபத்தில் வெளியான ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 125R அமோக வரவேற்பினை பெற்று டெலிவரி துவங்கி இரு மாதங்களில் 10,000க்கு மேற்பட்ட டெலிவரி செய்யப்படும் நிலையில் உற்பத்தி இலக்கை மாதம் 30,000 உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 

6 /9

125சிசி சந்தையில் முதல்முறையாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் பெற்ற எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் 124.7 cc ஒற்றை சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 11.8 PS மற்றும் டார்க் 10.5 Nm வெளிப்படுத்துவதுடன் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. டிஜிட்டல் கிளஸ்ட்டரை பெற்றுள்ள இந்த பைக்கில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் என இரு ஆப்ஷனை பெற்று மிகவும் ஸ்போர்ட்டிவான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது. லிட்டருக்கு 52-58 கிமீ மைலேஜ் வழங்குகின்ற 2024 ஹீரோ எக்ஸ்டீரீம் 125ஆர் பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.28 லட்சம் ஆகும்.

7 /9

ஹீரோ கிளாமர் 125 -  மாதந்தோறும் 30,000 கூடுதலான எண்ணிக்கையில் கிளாமர் 125 விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், இதே என்ஜினை பெற்ற சூப்பர் ஸ்பிளெண்டர்  125 மாடலும் 25,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp பவர் மற்றும் 6,000rpm-ல் 10.6 Nm டார்க் பெற்ற பைக்கில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு சராசரியாக 56-58 கிமீ வரை கிடைக்கின்றது. இந்த மாடலில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. 2024 ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் மற்றும் கிளாமர் 125 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.98,000  முதல் ரூ.1.16 லட்சம் ஆகும்.

8 /9

பஜாஜ் பல்சர் NS125 -  மாதந்தோறும் 40,000க்கு மேற்பட்ட விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வரும் நிலையில் பல்சர் NS125 பைக்கில் 4 வால்வுகளை பெற்ற 12PS பவர் மற்றும் 11 Nm டார்க் வெளிப்படுத்தும் 124.45cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுள்ளது. இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. பல்சர் 125 மாடல் 11.8Ps பவர், 10.8 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. 

9 /9

இந்த  பைக் மாடலில் ஸ்பிளிட் இருக்கை மற்றும் சிங்கிள் இருக்கை என மாறுபட்ட வசதிகளுடன் அமைந்துள்ளது. கூடுதலாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் பெற்ற மாடல் கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை வழங்குகின்றது. டிஸ்க் பிரேக் மற்றும் டிரம் பிரேக் வசதியுடன் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் உள்ளது. லிட்டருக்கு 48-52 கிமீ மைலேஜ் வழங்குகின்ற 2024  பஜாஜ் பல்சர் 125 மற்றும் NS125 பைக்கின் ஆன்ரோடு விலை ரூ.1.02 லட்சம் முதல் ரூ.1.29 லட்சம் ஆகும்.