‘வெற்றியின் சுடர்’ நாட்டின் கடைக்கோடி நகரமான கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தது; 1971-ஆம் ஆண்டு போரில் பங்கேற்ற போர் வீரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
பாகிஸ்தானுடனான 1971 ஆம் ஆண்டு போரில் இந்தியா பெற்ற வெற்றியைக் கொண்டாடுவதற்கு இந்தியா முழுவதும் எடுக்கப்பட்டு வரும் ’வெற்றியின் சுடர்’ (‘Flame of Victory’) கன்னியாகுமரியை வந்தடைந்தது. COVID-19 வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மாவட்ட சிவில் நிர்வாகத்தின் முன்னிலையில் வீரர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
Also Read | ஜூனியர் சிங்கப் பெண்களுக்கு பார்ட்டி கொடுத்து அசத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR
1971 போர் வெற்றியின் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில் (National War Memorial) அணையாமல் ஒளிரும் சுடரிலிருந்து நான்கு வெற்றி தீப்பிழம்புகள் ஏற்றப்பட்டன
நான்கு சுடர்களும் 1971 போர்வீரர்கள் மூலமாக நான்கு திசைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
ஜூலை 11, ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலிக்கு அருகே அமைந்துள்ள ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கடற்படை நிலையத்திற்கு (Naval Station INS Kattabomman) வந்து சேர்ந்தது.
வெற்றிச்சுடர் திருநெல்வேலி மாவட்டத்திற்கும், 1971 போரின் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சிப்பாய் காசிமணி மற்றும் சங்கிலி செல்லையா ஆகியோரின் வீடுகளுக்கும் கொண்டு செல்லப்படும்.
ஜூலை 13 புதன்கிழமையன்று தூத்துக்குடி மாவட்டம் வழியாகச் செல்லும் சுடரை இந்திய கடலோர காவல்படையினர் பெற்றுக் கொள்வார்கள். அதைத் தொடர்ந்து மதுரை செல்லும் வழியில் ஐ.என்.எஸ் பருந்து-விடம் (INS Parundu) ஒப்படைக்கப்படும்.