இந்த வருடம் தலை தீபாவளி கொண்டாடும் சினிமா பிரபலங்கள்!

Thala Diwali Tamil Cinema 2023: இந்த வருடம் பல சினிமா பிரபங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களில் தலை தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் என பார்க்கலாமா? 

1 /8

இந்த வருடம் பல இந்திய பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுள், தங்களின் தலை தீபாவளியை கொண்டாடும் பிரபலங்கள் யார் யார் என்று பார்க்கலாமா? 

2 /8

அசோக் செல்வன்-கீர்த்தி பாண்டியனின் திருமணம் அவர்களின் சொந்த ஊரில் மிக எளிமையான முறையில் நடைப்பெற்றது. இவர்கள், இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகின்றனர். 

3 /8

சின்னத்திரை நடிகராக இருந்து தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர், கவின். இவர், மோனிகா டேவிட் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

4 /8

கவின்-மோனிகாவிற்கு கடந்த ஆகஸ்டு மாதம் திருமணம் நடைப்பெற்றது. இவர்கள், இந்த வருடம் கணவன் மனைவியாக தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர். 

5 /8

தென்னிந்திய நடிகை அமலா பால், தனது காதலர் ஜகத் தேசாயை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். 

6 /8

ஜகத்-அமலா பாலின் திருமணம் கேரளாவில் உள்ள கொச்சியில் நடைப்பெற்றது. இவர்களுக்கும் இது தலை தீபாவளிதான். 

7 /8

இந்த ஆண்டு, பாலிவுட் திரையுலகில் நடைப்பெற்ற திருமணங்களிலேயே பெரிதாக பேசப்பட்டது, சித்தார்த் மல்கோத்ரா-கியாரா அத்வானியின் திருமணம்தான். இவர்கள் கணவன்-மனைவியாக கொண்டாடும் முதல் தீபாவளி இது. 

8 /8

ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கும் ராகவ் சத்தாவை இந்தி நடிகை பரினீதி சோப்ரா சமீபத்தில் கரம் பிடித்தார். இந்த தீபாவளியை இவர்கள் கணவன் மனைவியாக கொண்டாட உள்ளனர்.