கோவையிலும் பறக்க துவங்கியது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி!

சென்னையில் கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்துள்ள நிலையில் தமிழ்நாடு இனி சிறக்கும், வெற்றி நிச்சயம் என விஜய் கூறியதை முழங்கி தமிழகம் எங்கும் தொண்டர்கள் உற்சாகம்.

 

1 /6

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி தீவிர அரசியலில்  ஈடுபட்டு 2026 சட்டப்பேரவை தேர்தல்தான் இலக்கு என்றும் விஜய் அறிவித்தார்.  

2 /6

இதனை தொடர்ந்து தனது கட்சிக்கான கொடியை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஏற்றி வைத்தார்.  

3 /6

தமிழக அரசியலில் நடிகர் விஜயின் இந்த அடுத்த கட்ட மூவ்மெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் இன்னும் பரபரப்பாக இயங்க துவங்கி உள்ளனர்.  

4 /6

அதன்படி தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக பல்வேறு இடங்களில் முறையான அனுமதி பெற்று கட்சி கொடியேற்றப்பட்டது.   

5 /6

முன்னதாக தெற்கு மாவட்ட தலைவர் கோவை விக்னேஷ் சுந்தராபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் கொடியேற்றினார். அதனை தொடர்ந்து கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கட்சி கொடியேற்றப்பட்டது.  

6 /6

இதில் கலந்து கொண்ட தொண்டர்கள் நடிகர் விஜய் கூறிய, நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என முழக்கங்களை எழுப்பினர்.